வரும் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ
சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என வைகோ கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ தலைமையில் மதிமுகவின் சூளுரை நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், உயிர்த்தியாகம் செய்த 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் மதிமுக சந்திக்கும் எனத் தெரிவித்தார். தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி விழும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனவும், முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்றும் கூறினார்.
வரும் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுமா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுமா என அவரிடம் கேள்வி எழுப்ப, “இவையெல்லாம் கற்பனையாக எழும் கேள்விகள். இதுபோன்ற கேள்விகளுக்கே இங்கு இடமி...







