தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் – தேர்தல் ஆணையம் –
தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் - தேர்தல் ஆணையம்
தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அளித்த சிறப்பு பேட்டி:
*தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடைமுறைக்கு அமுல்படுத்தப்படும். சட்டப்பேரவை நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் அரசு எந்தவித புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.*
*தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. அதன்பேரில்,சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்த ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. தற்போது துணை ராணுவம் 45 கம்பெனி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.*
*தமிழம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு ஆயிரம் ...









