செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

பாரதிராஜா இயக்கி நடிக்கும் “மீண்டும் ஒரு மரியாதை”

பாரதிராஜா இயக்கி நடிக்கும் “மீண்டும் ஒரு மரியாதை”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’* மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாக கொண்டதாகவும் அமைகிறது. அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான வ...
வைரஸ் அச்சுறுத்தல் – சென்னை விமான நிலையத்தில் கடும் பரிசோதனை!

வைரஸ் அச்சுறுத்தல் – சென்னை விமான நிலையத்தில் கடும் பரிசோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சீனாவில் திடீரென கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் நகரமே முடங்கியது. போக்குவரத்து விமான சேவை அனைத்தும் முடங்கியது. நகரில் இருந்து யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அதே போல நகருக்குள் யாரும் நுழையவும் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று சோதனை செய்து அதன் பிறகே அனுப்பப்படுகின்றனர். விமான நிலைய சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி இந்திய விமான நிலைய ஆணையம் இச்சோதனையை செய்துள்ளது.  ...
10 லட்சத்தில் படமெடுத்தேன் மனம் திறந்த டே நைட் இயக்குனர்!

10 லட்சத்தில் படமெடுத்தேன் மனம் திறந்த டே நைட் இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம் அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர். டே நைட் படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது. மிகக்குறைந்த முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள். இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதை விட மர்டர் மிஸ்டர...
நான் கவர்ச்சி நடிகை இல்லை – நடிகை சோனா

நான் கவர்ச்சி நடிகை இல்லை – நடிகை சோனா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    *என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா வேண்டுகோள்!* நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளன.. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி பரப்பி வருகிறார்கள். ஒரு பிரபல தமிழ் ந...
மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் அறிமுகம்; நிமிடத்துக்கு ரூ.1 கொடுத்து நாள் முழுவதும் ஜாலியாக சுற்றலாம்!

மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் அறிமுகம்; நிமிடத்துக்கு ரூ.1 கொடுத்து நாள் முழுவதும் ஜாலியாக சுற்றலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் அறிமுகம்; நிமிடத்துக்கு ரூ.1 கொடுத்து நாள் முழுவதும் ஜாலியாக சுற்றலாம் சென்னையில் 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரத்தால் இயங்கும் ஃப்ளை (FLYY) என்ற இ-பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. மக்களுக்கு தேவையான பல புதிய திட்டங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கிண்டி, ஆலந்தூர், நந்தனம், பரங்கிமலை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயக்கும் ஃப்ளை (FLYY) என்ற இருசக்கர வாகனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ.5 செலுத்தி புக்கிங் செய்துவிட்டு, ஒரு நிமிடத்துக்கு ரூ.1 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தி ஒரு நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும்...
“83” படத்தில் இணைந்த கமலஹாசன் !   

“83” படத்தில் இணைந்த கமலஹாசன் !  

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    “83” படத்தில் இணைந்த கமலஹாசன் ! கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை  வழங்குகிறார்கள். இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த  பன்முகத்தன்மை கொண்ட நாயகனாக விளங்ககூடியவர் கமலஹாசன்.  அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  ( Rajkamal Films International ) தயாரிக்கும் மற்றும் வழங்கும் படங்கள்,எப்போதும் தரமும் தனித்தன்மை ஒருங்கே கொண்டதாக இருக்கும். அந்த வகையில் “83” படத்தை தமிழில் வழங்குவது குறித்து திரு. கமலஹாசன் கூறியதாவது... 83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உர...
நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்… விரைவில் ரெட்கார்னர்..!

நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்… விரைவில் ரெட்கார்னர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்... விரைவில் ரெட்கார்னர்..! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்த 2 பெண் சீடர்கள் மாயமானது தொடர்பாக சாமியார் நித்தியானந்தா மீது அம்மாநில போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியதாகவும் அவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாமியார் நித்தியானந்தாவை குஜராத் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவை விட்டு தப்பிச்சென்று ஈக்குவடார் நாட்டிற்கு அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவை கைது செய்ய தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளும்படி சிபிஐக்கு...
மலிவான அரசியல் செய்யாமல்  ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

மலிவான அரசியல் செய்யாமல் ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்! துக்ளக் விழா, பெரியார் சர்ச்சைப் பேச்சு, மன்னிப்பு கேட்க ரஜினி மறுப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது; நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல, 1971-ல் எதுவும் நடக்கவில்லை. துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ, நீதிமன்றத்துக்கு சென்று சில அமைப்புகள் எனக்கு கொடுத்த தகவலின் பேரில் தான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூறினார். நடைபெறாத ஒரு வி‌‌ஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி மக்களை திசை திருப்புகிறார். நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களில் பெரியாரும் ஒருவர். அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் எங்கள் தலைவர்கள் ஆவார்கள். இந்த 4 பெரும் தலைவர்களின் புகழுக்கு சிறு அளவில் இழுக்கு ஏற்பட்டாலும் கூட அ.தி.மு.க. குரல் கொடுக்கும். எதிர்த்து ...
சுமார் 14 லட்சம் பேர் மனு பிப்ரவரி 14ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி

சுமார் 14 லட்சம் பேர் மனு பிப்ரவரி 14ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிப்ரவரி 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹு தமிழகம் முழுவதும் ஜனவரி 4,5,11,12 ஆகிய தேதிகளில் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்து 1 ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் நாளை முதல் பரிசீலிக்கப்பட உள்ளது. அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் ...
வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020 2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார். ‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா ம...