ஜப்பானில் 24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு இன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் படகுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. படகில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கடலோர காவல் படையினர் 8 ரோந்துப் படகுகளில் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 மணி நேரத்திற்கும் மேலாகியும் படகில் சென்றவர்களில் ஒருவரும் உயிருடன் கண்டறியப்படவில்லை என கடலோர காவல் படை தெரிவித்துள்ளது....
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது.
இந்த வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர் என காவல்துறை செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார்.
தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வெடிவிபத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்....
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.
தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி செய்தார்.
இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகராக வலம் வந்த ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாம், 12 பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் ; இயக்குநர் VJ கோபிநாத்
வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது.
அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது.
கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..
இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.
ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது...
பூச்சி முருகனுக்கு சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது
பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது.
இதுதவிர, திரைத்துறைக்கு இத்தனை வருடங்களாக மனோபாலா ஆற்றியுள்ள சிறப்பான சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் அவருக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல உயர் கல்வி நிறுவனமான சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம், டாக்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் கௌரவ முனைவர் பட்டத்தை மனோபாலாவின் நீண்டகால திரைப்பணிக்காக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றிவரும் பூச்சி முருகனுக்கும் அவரது சேவைகளை அங்கீகரிக்கும் ...
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தொடர்ந்து அவெஞ்சர்ஸ், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த திரைப்படங்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. மார்வெல் திரைப்படங்களில் அடுத்த படமாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வெர்ஸ் ஆப் மேட்னஸ் என்ற திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் பெனெடிக்ட் கும்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்பைடர் மேன் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சேம் ரைமி இயக்கவுள்ளார்.
சவுதி அரேபியாவில் இப்படம் மே 5-ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிடுவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது.
இந்த படத்தில் ஒசித்தல் கோமேஸ் நடிக்கும் அமெரிக்கன் சாவேஸ் என்ற கதாபாத்திர தன்பால் ஈர்ப்பாளராக காட்டப்பட்டுள்ளது.
இது அந்நாட்டு சட்ட...
தமிழ் திரையுலகில் 80 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்த்தி இன்று அதிகாலை மும்பையில் காலமானார்.
அவருக்கு (வயது 62). சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி.
ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் இருந்து விலகி மும்பையில் வசித்து வந்தார்.
சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.
காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பிய போதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்.
அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
சசிகுமார் மும்பை ...
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் விடுதலையான திலீப், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது.
மேலும் வழக்கின் சாட்சியங்களை அழித்ததாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை நடிகை மஞ்சுவாரியர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3½ மணிநேரம் விசாரணை நடத்தினர். இதில் பல்...