கொடூர கந்துவட்டிக்கார அன்புவிடம் சொல்லுங்கள் தனிமையில் என்றாவது உன் மனசாட்சியிடம் பேசு… சசி என்னை மன்னித்து விடு – தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் அசோக்குமார் மரண எழுத்துமூலம்
அசோக்குமார் மரண வாக்குமூலம்
சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியான அசோக் குமார், கடன் பிரச்னை காரணமாக இன்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் ம்துரைஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ள விஷயங்களை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
‘என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1. கொலை, 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன்பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை.
எனக...









