நடிகர் அஜித்-க்கு ரசிகரின் செல்ஃபி தொந்தரவு!
நடிகர் அஜித் வாக்களிக்க சென்றபோது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்ததால், அவரது செல்போனை பிடுங்கி எச்சரித்துவிட்டு, பின்னர் செல்போனை அவரிடமே தந்துவிட்டார்.
நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள சென்னை பெருநகர் தொடக்கப்பள்ளியில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே சரியாக 6:30 மணிக்கு அவர் வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அஜித் - ஷாலினி ஆகியோருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முற்பட்டனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடத் தொடங்கியது
இதைத் தவிர்க்கும் வகையில் அங்கிருந்த போலீசார் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஆகியோரை 6.40 மணி அளவில் வாக்கு சாவடி மையத்திற்குள் அழைத்து வந்தனர். இருந்தபோதிலும் அவருடன் சில ரசிகர்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் தொடர்...









