ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கு 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்
ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கு 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகர் அருகே உள்ள சிறிய கிராமத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி, உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் தண்டுவடத்தில் அடிபட்டு படுத்த படுக்கையானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக டெல்லி அழைத்து சென்றும், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட காட்டாமல் அவசரகதியில் உ.பி. போலீசார் எரித்தனர். இந்த விவகாரம் பெரும்...









