தீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்! – அமைச்சர் கடம்பூர் ராஜு
தீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்! - அமைச்சர் கடம்பூர் ராஜு
"பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க வில்லை, தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து உரியவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம்" என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் உமறுப்புலவர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் தூவி மரியாதை செய்தார்.
இதை தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் செய்திய...









