ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும் போது பீ கேர்ஃபுல்! – ஆணையம் வார்னிங்
எந்த ஒரு சேவையையும் பெறுவதற்கு ஆதார் தகவல்களை இணையதளத்தில் பகிரும்போது, முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஆதார் ஆணையம் திடீரென எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங் களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் உள்ளதால், ஆதார் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரையில், வங்கி கணக்குகளுடனும், செல்போன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட...









