நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் – உரிமையாளர் மீது வழக்கு!
நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் - உரிமையாளர் மீது வழக்கு!
குஜராத் மாநிலம் கிருஷ்ணா நகர் மாவட்டத்தில் உள்ள திரண்பார்க் பகுதியை சேர்ந்தவர் சிரக் படேல், ஊர்விஸ் படேல்.
அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவரும் செல்லமாக நாய் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் அந்த செல்ல நாய்குட்டிக்கு பிறந்தநாளாம். இதையொட்டி கிருஷ்ணா நகரில் மிகவும் பிரமாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உறவினர்கள் அனைவருக்கும் அவர்கள் அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர். நுற்றுக்கணக்கானவர்கள் அந்த செல்ல நாய்க்குட்டி பிறந்த நாளுக்கு திரண்டு வந்தனர்.
நாய் குட்டியை கையில் வைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் கேக் வெட்டினார்கள். முதல் துண்டு கேக் அந்த நாய்குட்டிக்கு ஊட்டப்பட்டது. அபி என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நாய்க்குட்டிக்கு பட்டுத்துணியில் உட...









