சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள் பதிவு: ஜூன் 20, 2018 21:49
நாளை மறுநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, விஜய் 62 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகியது முதலே அதற்கான கொண்டாட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் விஜய் பிறந்தநாளுக்கும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு ...









