செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்!

முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்! அதிக வேகம் ஆபத்தானது... இதை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கான்வாய் வாகன அணிவகுப்பில் நடந்துள்ளது. விபத்து நடக்கும் போது அங்கிருந்த பொதுமக்களில் யாரோ ஒருவர் எடுத்த வீடியோவை பார்த்தபின் முதல்வர் வாகனத்தை பின் தொடர்ந்து செல்லும் போது அவ்வளவு வேகம் தேவையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். மறைந்த பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் மற்றும் சிலையை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்க சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து அதிமுக பிரமுகர்கள் வாகனத்தில் அணிவகுத்து சென்றனர். அப்போது வாகனங்கள் சென...
தமிழகஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழகஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தமிழக அரசு அறிவிப்பு பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது * பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. * தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப...
தியேட்டர்களில் 100 சதவீத சீட் நிரப்ப அரசு அனுமதிக்க வேண்டும் “ஈஸ்வரன்” சிம்பு அறிக்கை

தியேட்டர்களில் 100 சதவீத சீட் நிரப்ப அரசு அனுமதிக்க வேண்டும் “ஈஸ்வரன்” சிம்பு அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! "ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்ன...
கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்!

கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள்
கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்! ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி லேசான மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கங்குலி விரைவில் நலம்பெற வேண்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்...
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

HOME SLIDER, NEWS, Photos, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள் அபுதாபியில் பாரம்பரிய கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் பெயரில் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கலைபொருட்கள், பாரம்பரிய தயாரிப்புகள், உணவுபொருட்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா நடைபெறும் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 கோபுரங்களில் இர...
2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகள், விவகாரங்கள் தொகுப்பு!

2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகள், விவகாரங்கள் தொகுப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின, அதன் முழு தொகுப்பை காணலாம். 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் திரையுலகமே முடங்கி இருந்தாலும், சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்துக்கொண்டே தான் இருந்தது. அதன் தொகுப்பை தற்போது காணலாம். பெரியார் சர்ச்சை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடந்த துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர். ஆனால் ரஜினி, நான் நடந்ததை தான் சொன்னேன், இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். விஜய் வீட்டில் ரெய்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது, வருமான...
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு சின்மயி கண்டனம்!

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு சின்மயி கண்டனம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தனர். அதில் முதல் நபராக வந்த சிவானியின் அம்மா, சிவானியை வறுத்தெடுத்தார். சிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பக்கம் சிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்று பார்க்காமல் தனது மகளை இவ்வாறு திட்டி அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தாய் தன் மகளை...
திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் – மோகன்லால் அறிவிப்பு

திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் – மோகன்லால் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது. இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அ...
சவுரவ் கங்குலியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா பானர்ஜி

சவுரவ் கங்குலியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க (பிசிசிஐ) தலைவராக செயல்பட்டு வருகிறார். மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதியம் 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்படுள்ளதாகவும், அதற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சவுரவ் கங்குலி பெற்று வரும் மருத்துவமனைக்கு மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்றார். அங்கு அவர் சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். ...
இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு - இயக்குநர் சுசீந்திரன் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது: படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, இதேமாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள். இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்த...