செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஜோ பைடன் பதவியேற்பு விழா எளிமையாக நடக்கிறது

ஜோ பைடன் பதவியேற்பு விழா எளிமையாக நடக்கிறது

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். இந்தநிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இதை ஏற்க முடியாது என்று டிரம்ப் கூறி வந்தார். எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அது தள்ளுபடி ஆனது. தற்போது அமெரிகாவின் புதிய அதிபர் ஜோ பைடன் என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்கும் விழா வருகிற ஜனவரி மாதம் 20-ந்தேதி நடக்கிறது. இதில் இருவரும் பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார்கள். வழக்கமாக அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு விழாவுக்கு 2 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும். பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இந்த விழா கோலாகலமாக நடைபெறும். இந்த முறை புதிய அதிபர் ஜோபைடனின் பதவி ஏற்பு வ...
சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் – எல்.முருகன்

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் – எல்.முருகன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் யார் என்பதை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும். சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும். இன்று முதல் 21-ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக  கூறினார். இந்த சுற்று பயணத்தின் போது வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் . அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில் ச...
இன்னும் 3 மாதம் அல்லது 4 மாத காலத்தில் நாம்தான் ஆளுங்கட்சியாக வரப்போகிறோம் – மு.க.ஸ்டாலின்

இன்னும் 3 மாதம் அல்லது 4 மாத காலத்தில் நாம்தான் ஆளுங்கட்சியாக வரப்போகிறோம் – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 67 மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– நான் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், முதல் அமைச்சருக்கு வழிகாட்டக்கூடிய ஒருவனாக நான் இருக்கிறேன். வழிகாட்டுவதை அவர் பின்பற்றுகிறாரா? என்ற சந்தேகம் இருப்பது வேறு பிரச்சினை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. தி.மு.க. எதிர்க்கட்சி. ஆனால் நாம் அறிவிப்பதை பார்த்துத்தான் ஆளுங்கட்சியினர் அவற்றைச் செய்யக் கூடிய நிலைமை உள்ளது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களை பொறுத்தவரையில் அதுதான் ஆளுங்கட்சி. அதுதான் உண்மை. இன்னும் 3 மாதம் அல்லது 4 மாத காலத்தில் நாம்தா...
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 -முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 -முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும். வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்...
கொரானா தடுப்பூசி அபாயம் எச்சரிக்கும் பிரேசில் அதிபர்!

கொரானா தடுப்பூசி அபாயம் எச்சரிக்கும் பிரேசில் அதிபர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரேசில் அதிபரா இருப்பவர் போல்சனேரோ. இன்னி வரைக்கும் உலகையே ஆட்டிப் படைச்சு வரும் கொரோனாத் தொற்றை, சிறிய அளவிலான ஃப்ளு காய்ச்சல் அப்படீன்னு சொல்லியிருந்தார். இந்தநிலையில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும், நான் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும் தெரிவிச்சுட்டார். இதுகுறித்து அவர், "அந்த ஊசியால் ஏபடும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.' நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை" என பைசர் ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும், "நீங்கள் ஒரு சூப்பர் ஹியூமனாக மாறினால், ஒரு பெண் தாடியை வளர்க்கத் தொடங்கினால் அல்லது ஆண் குரலில் பேச ஆரம்பித்தால், அவர் களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது" என பைசர் நிறுவனத்தை போல்சனேரோ கமெண்ட் அடிச்சிருக்கார்...
தேர்தல் பணிக்கு அதிகாரிகள் நியமனம் தேர்தல் கமிஷன் திடீர் உத்தரவு!

தேர்தல் பணிக்கு அதிகாரிகள் நியமனம் தேர்தல் கமிஷன் திடீர் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் நியமிக்கப் படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆறு மாத காலத்திற்குள் ஓய்வுபெறுவோரை தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது என்று சர்குலர்....
பெருமாளை வணங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி!

பெருமாளை வணங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பெருமாளை வணங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அ.தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சர் வேட்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதைதொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து வருகிறார். இன்று (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்...
விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலெக்டர்!

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலெக்டர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருநெல்வேலியில் நீர்வாழ் பறவைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. 16 கிலோ மீட்டர் தூரம் நடத்தப்பட்ட இந்த பேரணியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுவும் பங்கேற்றார்.
பேராசிரியர் பிறந்த நாளில் அரக்கோணத்தில் ஏழைகளுக்கு பா.எழில் இனியன் உணவு வழங்கினார்!

பேராசிரியர் பிறந்த நாளில் அரக்கோணத்தில் ஏழைகளுக்கு பா.எழில் இனியன் உணவு வழங்கினார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அரக்கோணம் நகரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல் அண்ணன் ஆர்.காந்தி எம்.எல்.ஏ.அவர்கள் அறிவுருத்தல் படி முன்னாள் கழக பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் பா.எழில்இனியன் பூ தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் நகர கழக துணை செயலாளர் எ.அன்புலாரன்ஸ், மாவட்ட பிரதிநிதிகள். வி.எஸ்.ஆர்.ரவி பூக்கடை என்.அரி மாவட்ட தொண்டர் அணி துனை அமைப்பாளர் பி.ஆர்.விமல் , மாவட்ட இல.அணி துணை அமைப்பாளர் பி.மூர்த்தி வி.மோகன் எஸ்.எழிலரசு சி.வில்வநாதன் வி.ரவி.சம்சுதீன் கே.எம்.எஸ்.பழனி ஆர்.மோகன்ராஜ் வழக்கறிஞர்.ராமமூர்த்தி ஆர்.பாலாஜி எ.எச்.ஆதம் டி.சாம் என்.எஸ்.கேசவன் வி.மனோகரன் வி.முருகன் விணோத் எஸ்.குமார் என்.நவீன் எ.அஅருண் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்...
சாதிப் பெயரை சொல்லி ஸ்டாலினை வசைப்பாடியதற்கு மன்னிப்பு கேட்ட ADMK அமைச்சர்!

சாதிப் பெயரை சொல்லி ஸ்டாலினை வசைப்பாடியதற்கு மன்னிப்பு கேட்ட ADMK அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுரை அருகே உள்ள பரவையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, குறிப்பிட்ட சமுதாயத்தை மேற்கோள்காட்டி, அவர்களின் புத்திதானே ஸ்டாலினுக்கு வரும் என பேசியதாக சர்ச்சை எழுந்தது.   இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து சற்றுமுன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “செய்தியாளர் சந்திப்பில் யதார்த்தமாக நான் பழமொழியை குறிப்பிட்டேன். நான் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. செய்தியாளர் சந்திப்பில் நான் ஜாதி குறித்து பேசவில்லை. தேர்தல் நேரத்தில் எனக்கு யாரும் ஜாதி சாயம் பூச வேண்டாம். செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட சமுதாயம் குறித்து நான் பேசியதாக நினைத்தால் வருத்தம் தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்” எனக் கூறியுள்ளார். முன்னதாக மதுரையில் எய்ம்ஸ் மருத...