செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'.   ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'. சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள்.   ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் ...
சின்னத்திரை வெற்றித் தொடரான  “ரமணி Vs ரமணி” புதிய சீசனாக மீண்டும்!

சின்னத்திரை வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” புதிய சீசனாக மீண்டும்!

HOME SLIDER, TV news, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது. புதிய தொடர் ‘ரமணி Vs ரமணி 3.0’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் வந்துவிட்டார்கள் ரமணி, இந்த முறை இன்னும் பெரிதாக, இன்னும் சிறப்பாக, மிக நவீனமாக வந்துள்ளார்கள் ! ஒரு சிறிய திரைத் தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுல் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவது தான் நிகழும், ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பபட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். இயக்குனர் நாகாவின் “ரமணி Vs ரமணி” தொடரானது இதற்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. சின்னத்திரையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தந்ததோடு அல்லாமல், இப்போதும் ஆன்லைன் தளங்களிலும் ஒரு அற்புதமான அனுபவத்தை தொடர்ந்து தந்து வருகிறது. &nb...
விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

HOME SLIDER, TV news, செய்திகள்
    Trend Loud India Digital மற்றும் இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. எழுத்து & இயக்கம் விக்னேஷ் விஜயகுமார்     கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் & வித்யா...
“திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான்” -நாக சைதன்யா

“திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான்” -நாக சைதன்யா

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள், நடிகைகள்
"திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான்" -நாக சைதன்யா நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், இவர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா விவாகரத்து என்பது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் விவாகரத்துக்கு பின் சமந்தா சந்தோசமாக இருந்தால் தனக்கும் சந்தோசம்தான் என்றும் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் என்றும் அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் சமந்தா நடித்த ’மஜ்லி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மீண்டும்  “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்

ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மீண்டும் “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்

HOME SLIDER, TV news, சினி நிகழ்வுகள்
      ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் ! OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், 'அம்முச்சி' என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தகுழு அம்முச்சி சீசன் 2 உடன் மீண்டும் வந்துள்ளது. இந்த டிரமா காமெடி தொடரின் புதிய சீசன் 8 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது. கிராமப்புற பின்னணி...
இயக்குனர் சங்க தலைவராக  மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா?

இயக்குனர் சங்க தலைவராக மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா?

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
  இயக்குனர் சங்க தலைவராக  மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா? https://youtu.be/b4-yJ7FYwFE
நீட்தேர்வு விவகாரம்… உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

நீட்தேர்வு விவகாரம்… உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பான மனுவை அளித்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், கடந்த செப்.13-ல் சட்டப்பேரவையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இதை சுட்டிக்காட்டி, குடியரசுத் தலைவரை தமிழக எம்பிக்கள் கடந்த டிச.28-ல் சந்திக்க முயற்சித்தனர். எனினும், சந்திப்பு நடைபெறாததால், அவரது அலுவலகத்தில் நீட் தேர்வுதீர்மானம், ஆளுநர் அனுப்பாதது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மனு ஒன்றை அளித்தனர். அந்த மனு அன்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்துக்கு அனுப்பப்பட...
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய எலன் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய எலன் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
    மின்சார வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக , டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் கூறிய நிலையில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். உலக அளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 7 வகையான மின்சார கார்களை விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. எனினும், டெஸ்லா நிறுவனம் இறக்குமதி வரி சலுகை உள்ளிட்ட சலுகைகளை கோரி வருவதால், டெஸ்லா கார்கள் இந்தியாவில் கிடைப்பது காலதாமதமாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் கிடைக்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்கிடம்இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அவர், இந்திய அரசிடம் பல்வேறு சவால்களை எத...
திருச்செந்தூர் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருச்செந்தூர் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
      தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகை முதல் தைப்பூசமான செவ்வாய்க்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.   5 நாட்கள் தடை எதிரொலியாக அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த வியாழக்கிழமை வரை ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த நிலையில் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருவிழா இன்று  நடக்கிறது. இதையொட்டி திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட...
தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்!

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்! இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். போதுமான நேரம் தூங்காமல் இருந்தாலோ, தூக்கம் வராமல் தவித்தாலோ அது ஆரோக்கியத்தை கெடுக்கும். உடல் பருமன் பிரச்சினைக்கும் வழி வகுத்துவிடும். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் தூக்கமின்றி தவிக்க வேண்டியதிருக்கும். சர்க்கரை, காபின் கலந்த பொருட்களையும் சாப்பிடக்கூடாது. சரி! தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம். கிரீன் டீயை இரவு பருகுவது உடலுக்கு நல்லது. அதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். குறிப்பாக அது தூக்கத்திற்கு வழிவகை செய்யும். உடல் எடையையும், கொழுப்பையும் குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மன அழுத்தம், கவலையை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். தூங்குவதற்கு முன்பு பால் பருக...