நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராப் போட்ட டாக்டர் மீது வழக்கு!
நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராப் போட்ட டாக்டர் மீது வழக்கு!
ஆட்டோகிராப் என்றால் பேப்பரில் போடலாம், புத்தகத்தில் போடலாம், ஏன் ஒரு சிலர் கைகள் உள்பட ஒருசில உடலின் ஒரு சில பாகங்களில் கூட ஆட்டோகிராப் கேட்பார்கள்.
ஆனால் டாக்டர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த போது நோயாளியின் கல்லீரலில் ஆட்டோகிராஃப் போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள பிர்மிங்காம் என்ற நகரில் கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக பிம்மிஹால் என்பவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்கனவே கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்போனது வேறு டாக்டர். அப்போது அந்த கல்லீரலில் ஒரு இனிசியல் இருப்பதை பார்த்து அந்த டாக்டர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
உடனடியாக அதனை போட்டோ எடுத்து மருத்துவமனை நிர்வா...









