வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

இங்கிலாந்தில் தமிழக அரசின் சார்பில் பென்னிகுவிக் சிலை அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இங்கிலாந்தில் தமிழக அரசின் சார்பில் பென்னிகுவிக் சிலை அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு அவருடைய சொந்த நாட்டில் சொந்த ஊரில் சிலை வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணை முல்லைப் பெரியாறு அணை என்பதும்,

இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது என்பதும், இந்த அணை கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது என்றாலும் தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணை கடந்த 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கட்டப்பட்ட போது மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் பொறுப்பேற்று கட்டினார்.

ஒரு கட்டத்தில் இந்த அணையை கட்டுவதற்கான செலவை அரசு தர முடியாது என்று கூறி விட்டதை அடுத்து பென்னிகுக் தனது சொந்த பணத்தில் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுக் பிறந்த நாளன்று அந்த பகுதி மக்கள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

216 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன