சென்னை பல்கலைகழகத்தில் எம்.ஜி.ஆர். இருக்கை-க்காக 25 லட்சம் நிதி அளித்த சைதை துரைசாமி!
சென்னை பல்கலைக்கழகத்தில், இதுவரை பல பெரிய தலைவர்கள் பெயரில் ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த தலைவர்கள் பற்றி மாணவர்கள் ஆய்வு செய்ய வசதியாக இருக்கிறது. தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. ஆனால், அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனபிறகும், அவர் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள முடியவில்லை என சைதை துரைசாமியின் மனித நேய மையத்தின் வழியாக ‘சிவில் சர்வீஸ்’ தேர்வு எழுதும் மாணவர்கள் மூலம் அவருக்கு தெரிய வந்தது. இதற்கு காரணம் அவர் பெயரில் ஆய்வு இருக்கை இல்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சைதை துரைசாமி உடனடியாக சென்னை பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.25 லட்சத்தை அவர் தலைமையில் இயங்கி வரும் மனிதநேய மையத்தின் சார்பில் வழங்கினார். இதற்கான ஒப்புதல் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ‘சிண்டிகேட்’...









