ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் – முதலமைச்சர் பழனிசாமி
அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்
இந்த கூட்டத்தின் சட்டசபை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும், பொதுக்குழுவுக்கும் ...








