ஜெ., மரணம்: தினகரன், கிருஷ்ண பிரியா, பூங்குன்றன் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்
ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கடந்த 20–ந் தேதி வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தது. விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் விதமாக வெற்றிவேல் வீடியோ வெளியிட்டதாக, நீதிபதி ஆறுமுகசாமியின் செயலாளர் பன்னீர்செல்வம் புகார் தெரிவித்தார். தேர்தலுக்கு ஒருநாள் முன்பு, வீடியோவை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி, பொது அமைதிக்க...








