வாங்கிய கடனை அடைக்காமல் தப்பிக்க சசிக்குமார் சுமத்தும் பொய் குற்றச்சாட்டு… இயல்பாக இல்லாமல் சினிமாத்தனமாக இருக்கும் தற்கொலைக் கடிதம் – ஜாமீன் மனுவில் அன்புச்செழியன் பகீர்
அன்புச்செழியனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தொடர்ந்து முயற்சித்தும் பலன் கிடைக்காததால், அன்புச்செழியன் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் உறவினரும், அவரது நிறுவனத்தின் இணைத்தயாரிப்பாளருமான அசோக்குமார் நவம்பர் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அன்புசெழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸாரின் கைதுக்கு அஞ்சி அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்பட்ட தென் மாவட்டங்கள், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு...









