புதன்கிழமை, மே 27
Shadow

HOME SLIDER

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். மாரி-2 படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி இரண்டாவது பாதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பிலும் தனுஷ் ஒப்பந்தமாகி இருந்தார். அந்த படத்தை தனுஷே இயக்குவதாக சமீபத்தில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷே வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் அவரது அடுத்த படத்தை இயக்குகிறார். அதில் நாயகனாகவும் நடிக்கிறார். தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற...
ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை தக்க வைக்கலாம்” என்று கூறினார். “கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களே, மற்றவர்களை களங்கம் விளைவித்ததாக நடவடிக்கை எடுக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். இவர்களின் ஆட்சி இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே தொடரும்” என்றும் கூறினார். இந்நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அ.தி.மு.க ஆட்சி மீது திட்டமிட்டு வீண்பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சி செய்கின்றனர். ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க என...
எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்..!

எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஆக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் சென்னை கோட்டையில் சபாநாயகர அறையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். பதவி பிரமாணம் செய்து வைத்த சபாநாயகர் தனபாலுக்கு ரோஜா பூக்கூடை கொடுத்து தினகரன் மகிழ்ச்சி தெரிவித்தார்.  
அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கடந்த 26ந்தேதியில் இருந்து சந்தித்து வருகிறார்.  அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார்.  இந்த நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று 4வது நாளாக ரசிகர்களை சந்திக்கிறார்.  கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் இந்த சந்திப்பு நடக்கிறது. அவர் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொழுது, 31ந்தேதிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன என கூறினார்.  இதனை தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஆரவாரம் எழுந்தது.  தொடர்ந்து அவர், என் நண்பர்கள் அதிகம் வாழும் ஊர் கோவை.  என் குருநாதர் சச்சிதானந்த் கோவை மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர். பெயர், புகழால் மரியாதை கிடைக்கும்.  ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்தே மக்கள் நம்மை மதித்திடுவார்கள். காலம்தான் மிக முக்கியம்.  காலம் வரும்பொழுது அனைத்தும் தன்னாலே மாறும்.  சினிம...
கலைத்துறையில் வெள்ளிவிழா கொண்டாடும் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் ஜன.12ல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார்..!

கலைத்துறையில் வெள்ளிவிழா கொண்டாடும் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் ஜன.12ல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இளையராஜாவின் இசைக்குழுவில் கீ போர்ட் பிளேயராக இருந்த ஏ.ஆர்.ரகுமானை, இயக்குநர் மணிரத்னம் 'ரோஜா' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். 1992-ம் ஆண்டில் ரிலீஸ் ஆன ‘ரோஜா’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில், இசை உலகில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் தற்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நாடு முழுவதிலும் இருந்து இசைக் கலைஞர்களும் பாடகர் - பாடகியர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். சினிமாவில் இசைப்பயணத்தை துவக்கி, 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார் ரகுமான். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இச...
வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது பக்தர்கள் தரிசனம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 18-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. மறுநாள் பகல் பத்து உற்சவம் ஆரம்பமானது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதற்காக, அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். பரமபத வாசலை கடந்து செல்லும் நம்பெருமாள் காலை 5.15 மணிக்க...

‘காலா’ படத்தின் புதிய அப்டேட்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'காலா'. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா உள்ளிட்ட படக்குழுவினர் பணிபுரிந்த...
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றில் தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 8-ம் தேதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பின், முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற உள்ளார். பேரவை எத்தனை நாள்கள் நடக்கும் என்பதுகுறித்து, அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், முதல்முறையாக சட்டப்பேரவை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். மேலும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யாரும் சட்டப்பேரவைக்கு வர முடியாத சூழலே நிலவுகிறது...