புதன்கிழமை, மே 27
Shadow

HOME SLIDER

வாங்கிய கடனை அடைக்காமல் தப்பிக்க சசிக்குமார் சுமத்தும் பொய் குற்றச்சாட்டு… இயல்பாக இல்லாமல் சினிமாத்தனமாக இருக்கும் தற்கொலைக் கடிதம் – ஜாமீன் மனுவில் அன்புச்செழியன் பகீர்

வாங்கிய கடனை அடைக்காமல் தப்பிக்க சசிக்குமார் சுமத்தும் பொய் குற்றச்சாட்டு… இயல்பாக இல்லாமல் சினிமாத்தனமாக இருக்கும் தற்கொலைக் கடிதம் – ஜாமீன் மனுவில் அன்புச்செழியன் பகீர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அன்புச்செழியனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தொடர்ந்து முயற்சித்தும் பலன் கிடைக்காததால், அன்புச்செழியன் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் உறவினரும், அவரது நிறுவனத்தின் இணைத்தயாரிப்பாளருமான அசோக்குமார் நவம்பர் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அன்புசெழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸாரின் கைதுக்கு அஞ்சி அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்பட்ட தென் மாவட்டங்கள், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு...
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சினிமா பிஆர்ஓ தொழில் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகும் இனிய வரலாற்று நிகழ்வு, யூனியன் பதிவு செய்து 25 ஆண்டுகள் ஆகும் வெள்ளி விழா என முப்பெரும் விழாவை கொண்டாட உள்ளனர். விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நுங்கம்பாக்கம் லே மேஜிக் லேன்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள், திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை “மக்கள் தொடர்பாளராக” நியமித்து திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் டாக்டர் கலைஞர் முதல்வரான பின் எங்கள் பிதாமகன் பிலிம்நியூஸ்ஆனந்தன் அவர்களுக்கு “கலைமாமணி” விருது வழங்கி கௌரவப்படுத்தினார். அதன்பிறகு முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர...
மலேசியாவில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா, ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து!

மலேசியாவில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா, ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான ‘நட்சத்திர விழா 2018’ வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள். மேலும் எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது.இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறி...
மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாரா விஜய்..!

மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாரா விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் மற்றும் முருகதாஸ் வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் விஜய்-62 படத்திற்கான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இந்த படத்திற்கான அப்டேட்டுகளை விஜய் ரசிகர்கள் கண் கொத்திப் பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படத்திற்காக ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரன், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளராக ஆஸ்கர் ரஹ்மான் என ஒரு நட்சத்திர பட்டாளமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கத்தி படத்தை போலவே இரண்டு விஜய் இருப்பார்கள். இதில் ஒரு விஜய்க்கு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டார். இது வரை விஜயை பார்க்காத கோணத்தில் காட்டப் போகிறார் முருகதாஸ். மேலும், இரண்டு விஜயில் ஒரு விஜய் உடல் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்,  படத்தின் குழு விஜய் -62வில் தளபதி அப்படி (மாற்றுத்தி...
ஆதாரம் இருந்தால் S.A.சந்திரசேகர் மீது வழக்கு பதியலாம் ஐகோர்ட் உத்தரவு

ஆதாரம் இருந்தால் S.A.சந்திரசேகர் மீது வழக்கு பதியலாம் ஐகோர்ட் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை லஞ்சம் கொடுப்பது என விமர்சித்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி எனும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார். இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இரு மதங்களுக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இந்து முன்னணி நிர்வாகி வி.ஜி.நாராயணன் என்பவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அவரின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் வழக்க...
15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு-பிரபுதேவா..!

15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு-பிரபுதேவா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் மூலம் பிரபு தேவா - பிரபு இருவரும் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’. கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’. இந்த படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதற்கட்டப படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு  தொடங்கியது. அதில் பிரவுதே...
புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை

புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
புத்தாண்டை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது. ஆபாச நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சன்னி லியோனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. பெருகிவரும் எதிர்ப்பினால் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். மக்கள...
ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!

ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் கமல்ஹாசன் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்றுள்ளார். இதற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ராகுல்காந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் இருக்கை வரையறுக்க கூடியது அல்ல. ஆனால் உங்கள் தகுதியை நீங்கள் வரையறுக்க முடியும்....
பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாகுமா? சிறப்பு அதிகாரி பத்ரா பேட்டி

பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாகுமா? சிறப்பு அதிகாரி பத்ரா பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தெரிவித்துள்ளார். இன்று சென்னை வந்த பத்ரா, தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பணப்பட்டுவாடா புகார்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, இப்போதே அதுகுறித்து முடிவெடுக்க முடியாது என்று பத்ரா தெரிவித்தார். பத்ரா, சென்னையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், அரசியல் கட்சியினரின் கருத்துக்களை கேட்பதற்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது என்றார்...
ஆர்.கே. நகரில் கரை புரளும் கரன்சி மழை… ஆளும் கட்சிக்கு எதிராக டிடிவி அணியும், திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு..!

ஆர்.கே. நகரில் கரை புரளும் கரன்சி மழை… ஆளும் கட்சிக்கு எதிராக டிடிவி அணியும், திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அங்கு ஓரிடத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த பணக் கத்தையையும் பெயர் பட்டியல் அடங்கிய நோட்டையும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் பறிமுதல் செய்தார். ஆர்கே நகரில் இன்று காலை முதல் பணப்பட்டுவாடா என்று தொகுதியே அல்லோகலப்படுகிறது. ஆங்காங்கே வீடுகளில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் பணம் பறிமுதல் செய்தவர்களை மக்கள் பிடித்து கொடுத்தனர் என்றும் கூறப்படுகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போர்க் களமாக காட்சி அளிக்கும் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்த புகாரையும் போலீஸார் வாங்க மறுக்கின்றனர் என்று திமுக, தினகரன் அணியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணத்தையும் நோட்டு புத்தகத...