முன்ஜாமீன் கேட்டு பைனான்சியர் அன்புசெழியன் ஐகோர்ட்டில் மனு
கந்துவட்டி கொடுமையால் திரைப்பட இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிக்குமாரின் நெருங்கிய உறவினருமான அசோக்குமார் கடந்த 21-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் ஜி.என்.அன்புசெழியன் தான் காரணம் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாக மதுரை கீரைத்துரை மேலத்தோப்பைச் சேர்ந்த ஜி.என்.அன்புசெழியன்(வயது 50) மீது குற்றம் சாட்டி, அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் அன்புசெழியன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. பி.அசோக்குமாருக்கும் எனக்கும் எந்தவித நேரடி தொடர்போ, மறைமுக தொடர்போ இல்லை.
சசிக்குமார் ந...









