‘எல்லா கோட்டையும் அழிங்க… முதல்ல இருந்து ஆடுவோம்..’- சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி!
'எல்லா கோட்டையும் அழிங்க... முதல்ல இருந்து ஆடுவோம்..'- சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.
மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் "பரோட்டா சூரி" கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான "பரோட்டா காமெடி" இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இவ்வாறு சூரியின் திரைவாழ்க்கையில் முதல் திருப்புமுனை அமைந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.
அதன்பின் ரஜினிமுருகன், தேசிங்கு ராஜா, வருத்தப்படாத...









