செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

HOME SLIDER

அசாம், மேற்கு வங்காளம் முதல் கட்ட தேர்தல்!

அசாம், மேற்கு வங்காளம் முதல் கட்ட தேர்தல்!

HOME SLIDER, politics, செய்திகள்
வாக்குப்பதிவு தொடங்கிய அசாம் , மேற்கு வங்காளம்! மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை முடிந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. மொத்தம் 294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இன்று (27-ம் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் கட்டமாக 30 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. 21 பெண் வேட்பாளர்கள் உள்பட191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், 126 இடங்களைக் கொண்ட அசாம் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் இன்று (27-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி முடிகிறது. இங்கு முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவா...
நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது – மம்தா பானர்ஜி!

நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது – மம்தா பானர்ஜி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது - மம்தா பானர்ஜி! மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன...
ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு!

ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான பரிசோதனைகள்தான் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறி உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு சென்றதை கேள்விப்பட்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், நேரில் சென்று நலம் விசாரித்தார்....
ரன்களை வாரி வழங்கிய இந்திய அணி எளிதாக வீழ்த்திய இங்கிலாந்து!

ரன்களை வாரி வழங்கிய இந்திய அணி எளிதாக வீழ்த்திய இங்கிலாந்து!

HOME SLIDER, sports, செய்திகள்
ரன்களை வாரி வழங்கிய இந்திய அணி எளிதாக வீழ்த்திய இங்கிலாந்து! இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புனேயில் இன்று (26-ந் தேதி) பகல்-இரவு ஆட்டமாக தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 108 ரன்களும் ரிஷப் பண்ட் 77 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 43.3 ஓவரில் 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது. இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்சின் அதிரடியான ஆட்டமே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாகும். அதிகபட்சமாக ஜேசன் ராய் 55, ஜானி பேர்ஸ்டோ 124, ஸ்டோக்ஸ் 99 ரன்களும் எடுத்தனர். இ...
உதயநிதி ஸ்டாலின் மீது செங்கல் திருட்டு புகார்!

உதயநிதி ஸ்டாலின் மீது செங்கல் திருட்டு புகார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
உதயநிதி ஸ்டாலின் மீது செங்கல் திருடியதாக புகார்! திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளாத்திகுளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது,மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைக் கையோடு எடுத்து வந்துவிட்டேன். மதுரையில் அதிமுகவும், பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான்” எனக் கூறி ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். மேலும் இது தான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார். உதயநிதி ஸ்டாலின் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கலக்கியது. இந்நிலையில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடியதாக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் கோவில்பட்டி காவல்நிலையத...
புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது?-சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது?-சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது?-சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி! புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், வாக்காளர்களின் மொபைல் எண்களை ஆதார் மூலம் சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு ஒத்தி வைத்தனர். அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதி...
அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க, சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இயக்குனர் மோகனை சந்தித்து வாக்கு சேகரித்து மோகனையும் வாழ்த்தி சென்றார்....
திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம்-வரலட்சுமி சரத்குமார்!

திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம்-வரலட்சுமி சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம்-வரலட்சுமி சரத்குமார்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ”போடா போடி” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதிரடி கதாபாத்திரங்கள், ரிஸ்க்கான காட்சிகள் என துணிச்சலாக வரும் வரலட்சுமி, தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் திருமணவிழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார், மணமகனுடன் சேர்ந்து விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ உள்ளிட்ட பல பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்! பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ராம் சரணின் கதாபாத்திரம் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை ராஜமவுலி வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டரில் அல்லுரி சீதாராமராஜூ என்கிற கதாபாத்திரத்தில் ராம்சரண் தேஜா நடிப்பதாக ...
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய இப்படத்தில் ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்திருந்தார். தற்போது ஷகிலா சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் இணைந்திருக்கிறார் நடிகை ஷகிலா. இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷகிலா....