வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

அமீர்கான் வழியில் அஜித்

அமீர்கான் வழியில் அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜித்துக்கு எப்போதுமே இரட்டை வேட செண்டிமெண்ட் உண்டு. அவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி. அஜித் கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் அசல் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. எனவே இரட்டை வேடங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் இரட்டை வேடங்கள் என்கிறார்கள். இப்போது வயதான வேடத்துக்கான படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கிறது. அடுத்து இளமையான அஜித்துக்கான காட்சிகள் படம் பிடிக்கப்படும். இந்தியில் அமீர்கான் தங்கல் படத்தில் நடித்தபோது முதலில் தொப்பையுடன் கூடிய வயதான வேடத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் உடலை குறைத்து இளமையாக நடித்தார். அது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதேபோன்றதொரு ரிஸ்க்கை தான் அஜித்தும் எடுத்திருக்கிறார். முதலில் வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித், அதன் பின்னர் உடல் எடையை ...
போதை மருந்து கடத்தும் நயன்தாரா

போதை மருந்து கடத்தும் நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார். அனிருத் அளித்திருக்கும் பேட்டியில் இதை சொல்லி இருக்கிறார். மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். என்ன ஆகிறது என்பதுதான் கதை. இதை நெல்சன், பிளாக் ஹியூமர் பாணியில் காமெடியாப் பண்ணியிருக்கார். நயன் எனக்கு நெருக்கமான தோழி. சமயத்தில் விருந்து மாதிரி சாப்பாடு சமைத்து அனுப்புவார். அவருக்கு என் இசை பிடிக்கும். ‘நான் உங்க பெரிய விசிறி என்று சொல்வார். அவங்க வாழ்க்கையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள். ஆனால் இன்னும் முன்னணி கதாநாயகியாகவே இருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய வி‌ஷயம்’ என்று சொல்லியிருக்கும் அனிருத் விரைவில் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போகிறார். ஜனவரி மாதம் படம் துவங...
இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்

இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி இருக்கிறது. தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ...
முதலில் அவர்கள் சம்பளத்தை சொல்லட்டும் – ரகுல்ப்ரீத் சிங்

முதலில் அவர்கள் சம்பளத்தை சொல்லட்டும் – ரகுல்ப்ரீத் சிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் 40 நாட்களுக்கு மேல் நடந்த வேலை நிறுத்தத்துக்கு பிறகு நடிக, நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை ரகுல்ப்ரீத் சிங், ‘முதல்ல நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு வெளிப்படையா சொல்லட்டும். அதுக்கப்பறம் நடிகைகளோட சம்பளத்தைக் கேளுங்க. கண்டிப்பா நடிகர்களைவிட நாங்க பல மடங்கு குறைவாதான் சம்பளம் வாங்குறோம். ஆனா, சினிமாத் துறையினர் எல்லாருமே வருமானவரியைச் சரியா கட்டுறோம். அதனால, சம்பளத்தை வெளியே சொல்றதுல எந்தவிதத் தவறும் இல்லை. எல்லா நடிகர்களும் முன்வந்து சொல்லட்டும், நானும் சொல்றேன்!’ என்று அதிரடியாக சொல்லி இருக்கிறார். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ரகுல்ப்ரீத் சிங்கே நடிகர்களின் சம்பளம் பற்றி சர்ச்சையான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்....
சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா

சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் இடம் பெற்று உள்ள ‘ஹை ஆன் லவ்..’ பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் பெருக்கிக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் (இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிடதக்கது. யுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது, ‘இந்த படம் ஒரு திரில்லர் படம். திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம். இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பண...
என்ஜினீயரிங் மவுசு குறைந்ததால் கலைக்கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

என்ஜினீயரிங் மவுசு குறைந்ததால் கலைக்கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து உயர் படிப்பிற்காக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆன்லைன் மூலமாக கல்லூரி களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். என்ஜினீயரிங் படிப்பிற்கு கடந்த சில வருடங்களாக மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லை. பி.இ., பி.டெக் முடித்த லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் அலைந்து திரிகிறார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து விட்டதால் பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் படிப்படியாக குறைந்து விட்டது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த ஆண்டு மூடப்படுகிறது. பல லட்சம் செலவு செய்து 4 ஆண்டுகள் பொறியியல் படித்து முடித்தாலும் அதற்கான வேலையோ, ஊதியமோ கிடைக்காததால் பொறியியல் படிப்பிற்கு பதிலாக கலை-அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்கள் நாடிச் செல்கிற...
என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம் – தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம் – தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்பாண்டி உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இன்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை, மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்கிறது. மாவட்டந்தோறும் பயிற்சி பெற்ற உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய சென்னைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. 2 லட்சம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும்போது ஏற்படும் நேர விரயத்தை ஆ...
இறுதி முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் – மத்திய அரசு

இறுதி முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்க...
இளம்பெண் இசை அமைத்துள்ள  ” ஆண்டனி “

இளம்பெண் இசை அமைத்துள்ள ” ஆண்டனி “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் " ஆண்டனி " .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் "லால் " ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம்பத் ராம் ,'வெப்பம் ' ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த விழாவில்  பேசிய S .A சந்திரசேகர் பேசியவை " இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார். இந்த விழாவில்  ஜெயசித்ரா அவர்கள் பேசியவை " பட...