தேனி மாவட்டத்தில் 2633 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 15-ந் தேதி முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியம், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மாணவ- மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் உணவு அருந்தினார்.
அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:- சத்துணவுத் திட்டம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்குச் செல்லத் தூண்டுவது மட்டுமல்லாமல் வகுப்பறையில் பசியின்றிப் படிக்கவும் உதவுகிறது.
மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்தி, கற்றல் ஆர்வத்தினை அதிக்கப்படுத்துகிறது.
ஒவ்வொரு நாளும் சத்தாண உணவினை வழங்குவது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்து அதன் மூலம் மனித வளர்ச்சியை மேம்படுத்திடும் வகையில் ச...









