HOME SLIDER
கை விலங்குடன் விஷால்… வைரலான கைது படம்..!
தற்போது திரைத்துறையில் நடிகர் சங்கம் பொது செயலாளராகவும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் செய்திகளில் நிறைந்து நிற்பவர் நடிகர் விஷால். இன்று கைவிலங்குடனான ஒரு புகைப்படம் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ,விஷால் கைது செய்யப்பட்டார் என்று செய்திகள் பரவியது .
மணிக்கணக்காக இந்த செய்தி பரபரப்பாக பரவிக்கொண்டிருக்க, விஷால் தரப்பு அதுக்கு விளக்கம் அளித்துள்ளது. அது தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி புகைப்படம் தானே தவிர விஷால் கைது செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர் .
புது இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கும் அயோகியா படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.லைட் ஹவுஸ் மூவி மேக்கேர்ஸ்க்காக B. மது இப்படத்தை தயாரிக்கிறார்....
தமிழ் சினிமாவின் 10 ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்றும் இசைஞானி இளையராஜா 75 விழா..!
10 கதாநாயகர்களை இணைத்த 'இளையராஜா75' ! .
2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா75" இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடை பெற்றது. அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.
பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் - கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
'இளையராஜா75' டீசர் பல உருவாக்கப்பட்டது . அதை,நேற்று மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் விஷால், ,கார்த்த...
விஜய் படத்தில் ரோபோ ஷங்கர் மகள் அறிமுகம் – TMJA பொங்கல் விழாவில் அட்லி வாக்குறுதி
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
பிரியா அட்லி விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இயக்குனர் அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக கடை நிலை ஊழியர்களாக பணியாற்றி வரும் நலிந்த ஊழியர்களுக்கு உதவித் தொகையும் பொங்கல் பரிசு பைகளையும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் அட்லி, பிரியா அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோர் வழங்கி கவுரவப் படுத்தினர்.
பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி பேசியது: பத்திரிகையாளர்கள் இணைந்து இப்படி ஒரு விழாவை நடத்துவது ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது. குறிப்பாக சொல்வதென்றால் இந்த விழாவில் சினிமாவில் கடை நிலை ஊழியர்களை அழைத்து கவுரவம் செய்வது மிக சிறப்பு.
அந்த நிகழ்வில் என்னை அழைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது. காரணம் என் ஷூட...
குருவாயூரப்பன் அருள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது – பாக்யராஜ் கலகலப்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று 'கிரிஷ்ணம்' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கையாகப் பேசிக் கலகலப்பூட்டினார்.
தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் 'கிரிஷ்ணம்'. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது , "இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவ...
இந்தி பக்கம் போகும் ஜீவா..!
எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி , கலகலப்பு 2 என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.
சமீபத்தில் அவரை சந்தித்து பேசிய போது....
அவரது முதல் ஹிந்தி பிரவேசத்திற்கு வாழ்த்து சொல்லி ஆரம்பித்தோம்... இந்த 2019 உங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும் அல்லவா..
* நிச்சயமாக...2018 லேயே எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது...
சங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது... அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன்...அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன்....இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கு. தற்போத...
தமிழில் ரிலீஸ் ஆகும் ராம் சரணின் ‘வினயை விதேயா ராமா’
ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்"வினயை விதேயா ராமா" தமிழில் வெளியாகிறது !
தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும் /நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான "வினயை விதேயா ராமா" தமிழில் வெளியாகிறது. பிரிபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்குகிறார். 'பாரத் என்னும் நான்' என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
மேலும் பிரசாந்த், சினேகா,மதுமிதா, முகேஷ் ரிஷி,ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு,அரசியல்,செண்டிமெண்ட்,வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக "வினயை விதேயா ராமா" உருவ...
காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!
காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!
ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜீத் நடித்த விஸ்வாசம் இரு படங்களும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இரு நடிகர்களும் வியாபார ரீதியாக பேசப்படும் நடிகர்கள் என்பதால் இந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அரசு நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி தராத போதும் சில இடங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. அதோடு கோர்ட் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு பிரமாண்டமான கட் அவுட்களும் தியேட்டரை மறைக்கும் பிரமாண்டமான அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது. அதே போல டிக்கெட் விற்பனையில் அரசின் உத்தரவு எதுவும் பின்ப்ற்றப் படவில்லை. ஆயிரங்களில் டிக்கெட் விலை. லோக்கல் போலீசாருக்கு இந்த விதிமீறல்கள் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கிறார்கள். ரஜினி அரசியல் பரபரப்புகளுக்கிடையில் பேட்ட வந்திருப்ப...
2018ம் ஆண்டின் மிக சிறந்த படம் பரியேறும் பெருமாள் நார்வே திரைப்பட விருதுக்கு தேர்வு..!
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கியபயணத்தில் இந்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் எமது விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது.10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருதுகள் அறிவிப்பு:சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் எமது குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து எமது நடுவார்களால் தெரிவுசெய்யப்பட்ட 20 முழுநீளத் திரைப்படங்களில் 2019-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் இங்கே அறியத்தருகின்றோம்.அந்த வகையில் சிறந்த படமாக பா.ரஞ்ச...


