சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக ஊர்திக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்   மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளதாக புகழாரம் சூட்டினார். செம்மொழி தகுதியை தமிழக்கு பெற்றுத் தந்தது, மெட்ராஸ் பெயரை சென்னை என மாற்றியது தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது என திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். தமிழ், தமிழர் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல என்று கூறிய முதலமைச்சர், ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஹிந...
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நாடு முழுவதும் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவப்பட்டது. பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார்.   இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றில் உள்ள காவல் நிலையங்களில் மிகவும் சிறப்பாக பணிகளை செய்தல் குற்றங்களை குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றில் மத்திய அரசின் மூலம் வரையறுக்கப் பட்ட திறநளவிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையத்திற்கு முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் அரசால் வழங்கப்பட்டன. அதில் தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் தெ...
விஜய் குறித்து தனி நீதிபதி அளித்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

விஜய் குறித்து தனி நீதிபதி அளித்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
    தனி நீதிபதி கூறிய கருத்துக்ளை நீக்கக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அந்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய், லண்டனில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோல்ட் காரை வாங்கினார். இதற்கு இறக்குமதி வரியாக கிட்டத்தட்ட 2 கோடியை செலுத்தியிருந்தார். இருப்பினும், அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தில் பதிவுசெய்யும் போது, வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி சான்று வாங்கிவருமாறு கூறப்பட்டது. இந்த வரியை செலுத்தவேண்டிய அவசியமில்லை என கேரள மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளதாக கூறி இந்த வரியை நடிகர் விஜய் செலுத்த மறுத்திருந்தார்.   எனினும், நுழைவு வரியை கட்டாயம் செலுத்தவேண்டும் என வணிகத்துறை உத்தரவிட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொ...
தனுஷின் “வாத்தி” படத்திலிருந்து திடீரென விலகிய ஒளிப்பதிவாளர்!

தனுஷின் “வாத்தி” படத்திலிருந்து திடீரென விலகிய ஒளிப்பதிவாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் தனுஷுக்கு இது போறாத காலம் போல... சமீபத்தில் தனது திருமண வாழ்க்கை 18 ஆண்டுகளோடு முடிகிறது என சொல்லி மனைவி ஐஸ்வர்யாவை பிரிகிறேன் என குறிப்பிட்டிருந்தார் தனுஷ். இப்போது அவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் விலகியுள்ளார். தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்), படங்களைத் தொடர்ந்து மாறன் படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதேபோன்று ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த கிரே மேன் படமும் பிரபல ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 26-ம்தேதி மாறன் படத்திலிருந்து முதல் பாடலாக, பொல்லாத உலகம் என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   தனுஷ் தற்போது தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என 2 மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்து ...
ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி இந்திப் படம்!

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி இந்திப் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மும்பைக்கர் இந்திப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.   லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர்ஸ் பேனர் சார்பாக எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தை தயாரித்திருந்தார். நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.   படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை, சினிமா ரசிகர்களை மாநகரம் திரைப்படம் விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியதுடன், அவ...
இதுதான் நான் செய்த தவறு – வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி!

இதுதான் நான் செய்த தவறு – வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இதுதான் நான் செய்த தவறு - வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்சி இப்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தி திரையுலகில் அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்ததாக டாப்சி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது கதைகளை தேர்வு செய்யும் முறையில் சில தவறுகளை செய்தேன். வணிக படங்கள்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து அதுமாதிரியான படங்களை தேர்வு செய்து நடித்தேன். அதுதான் நான் செய்த தவறு. அதன் பிறகு நான் என்ன மாதிரி படங்களைப் பார்க்க விரும்புகிறேனோ, அதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். அது எனக்கு சாதகமாக அமைந்தது. ஆனாலும் ஒரு ரசிகையின் பார்வையில் இருந...
ஒரு பாடலுக்கு நடனம்…. பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி!

ஒரு பாடலுக்கு நடனம்…. பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஒரு பாடலுக்கு நடனம்.... பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி! ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்கு தெலுங்கு திரைத்துறையில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தான் நடிக்கும் போலா ஷங்கர் என்ற படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலைப்போல் ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். இந்த பாடலுக்கு நடிகை ராஷ்மி கவுதமை நடிக்க வைக்க சிரஞ்சீவியே சிபாரிசு செய்திருக்கிறார். ராஷ்மி கவுதம் தமிழில் சாந்தனுவுடன் கண்டேன் படத்தில் நடித்தவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியிலிருந்து பிரபலமானவர். பல தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மி, சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு ஆடுவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஐஸ்வர்யா அடுத்து பே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மியூஸிக் வீடியோ ஆல்பம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்குகிறார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியுள்ளார். தனது குழுவினரு...