தேசியகொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
தேசியகொடி அல்லது இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது இடத்தில் தேசிய கொடியை அவமதிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொது இடத்தில் தேசியகொடி அல்லது இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கொடியை அல்லது இந்திய அரசியலைப்புச் சட்டத்துடன் தொடர்புடைய பகுதியை எரிக்கிற, சிதைக்கிற, அழிக்கிற, மிதிக்கிற அல்லது அவமதிக்கிற செயலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் எச்ச...









