HOME SLIDER
பூஜையுடன் தொடங்கப்பட்ட ‘ஈடிலி’
யுவன் முத்தையா எழுதி, இயக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘ஈடிலி’.
லிம்மல் ஜி, லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியேசன்ஸ் டி சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர், இறுதிச்சுற்று - இறைவி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இப்படத்தை சாகர் புரொடக்சன்ஸ் மற்றும் சித்தர் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்....
சிவகார்த்திகேயனின் அடுத்த படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 24ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாளாக நடந்து வந்த நிலையில், இருவரும் இணைவது தற்போது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
...
500-வது படத்தில் அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அரவிந்த்சாமி
ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா ஆகிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
https://youtu.be/X40f8Lxc_0Q
தயாரிப்பாளர் பேசிய போது, " பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேயே அர...
திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வெளியான படம் ‘மவுனம் பேசியதே’. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில், திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனார்.
அடுத்து விக்ரமுடன் ‘சாமி’, விஜய்யுடன் ‘கில்லி’ என்று பல முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து அங்கும் முதல் இடம் பிடித்தார்.
இவ்வாறாக திரிஷா, திரை உலக பயணத்தில் தனது 15-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் தற்போது ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்....
அரசியல் ஆசை ? வரலட்சுமி சரத்குமார் விளக்கம்
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த வருடம் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘சத்யா’ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இதில் சத்யா படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசும்போது, ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.
சேவ் சக்தி அமைப்பு விஷயமாகதான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன்.
என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன். இந்த வருடத்தில் விக்ரம் வேதா, சத்யா என எனக்கு இரண்டு வெற்றி படங்கள் உள்ளது மக...
ஜெ.,வின் அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார்.இதுவரை விசாரணை ஆணையம் முன்பு தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குனராக இருந்த விமலா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, சென்னை மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை பேரா சிரியை கலா, மருந்தியல் துறை உதவி பேராசிரியர் முத்துச்செல்வன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்கு பஞ்சர் டாக்டர் சங்கர் ஆகியோர் ஆஜராகி விளக் கம் அளித்தனர்.இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ண...
ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினிகாந்த்
கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும் அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து பேசினார்.
“சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள்” என்றெல்லாம் பேசி அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
ரஜினிகாந்தின் பேச்சு அரசியலுக்கு வருவதை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கணிப்புகள் வந்தன. இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்த...
ஜெயம் ரவியின் அடங்க மறு படம் பூஜையுடன் தொடங்கியது..!
உலக அளவில் மீடியா துறையில், சின்ன திரை தயாரிப்பிலிருந்து சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரபல நிறுவனமான 'ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ' தமிழ் சினிமா துறையில் கால் பாதிக்கவுள்ளனர். அவர்கள் தங்கள் முதல் தயாரிப்பிற்கு கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என இரு தரப்பட்ட படங்களிலும் கலக்கி உயர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இப்படத்தை, சரண், மிஸ்கின் மற்றும் அமீருடன் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார். ஜெயம் ரவிக்கு இணையாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'அடங்க மறு ' என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து, '' ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவே...


