அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே!
96சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜூன கார்கே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
அவரோடு போட்டியிட்ட எம்.பி., சசி தரூர் 1,603 வாக்குகள் பெற்று சசி தரூர் தோல்வியடைந்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் அப்போதைய தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மூத்த தலைவர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் தலைவர் பதவியை ஏற்பதாக இல்லை.
அதன் பிறகு தற்காலிக தலைவராக மீண்டும் சோனியா காந்தி பதவி வகித்து வந்தார்.
பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியானது.
இந்த தேர்தலில் காந்தி மற்றும் நேருவின் குடும்பத்தினர் ய...









