விஜய்யின் ஜாலி வாக்... வைரலாகும் வீடியோ!
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்டமாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் விஜய், டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக விஜய் வலம் வரும் காட்சிகள் சமூ...
அது ஒரு இம்சை... தனிமையே பேரின்பம் - செல்வராகவன்!
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார்.
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சில கருத்துக்களை பதிவு செய்து வருவார். தற்போது, ‘இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.’ என்று பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்....
பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்... பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அவர் பேசினார். குறிப்பாக சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கினார்.
“ஆப்கானிஸ்தான் பிரதேசம் பயங்கரவாதத்தை பரப்புவதற்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். ஆப்கான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் காக்க வேண்டும்.
உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன. எந்தவொ...
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த ஐ.நா. பொது சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகளும் உருவாக்கி வருகின்றனர்.
இந்தியாவில் தடுப்பூசிகளை தயார...
கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!
வன்னியர் பெண் கண்ணகியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணகியையும் அவர் கணவர் தலித் சமூகத்தச் சேர்ந்த முருகேசனையும் துள்ளத் துடிக்க படுகொலை செய்த கொலையாளிகள் மற்றும் துணைநின்ற காவலர்களுக்கு இன்று தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
A2 கண்ணகியை படுகொலை செய்த அவரின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், A1-A15 (குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை (இதில் A4 & A9 விடுதலை செய்யப்பட்டனர்)
ஆயுள் தண்டனைப் பெற்ற A14 தமிழ்மாறன் அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவன். மற்றும் A15 செல்லமுத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் ஆய்வாள...
விஜய் ஆண்டனி நடிப்பு வரலாற்றில் அம்மா செண்டிமெண்ட் படம்தான் அவருக்கான தனி இடத்தை தனி உயரத்தை அடையாளப்படுத்தியது.
அப்படி ஹிட் கொடுத்த அதே அம்மா செண்டிமெண்ட் கருவை கையில் எடுத்து மீண்டும் விஜய் ஆண்டனி கொடுத்யிருக்கும் படம்தான் கோடியில் ஒருவன்.
கிராமத்தில் இருக்கும்போது அம்மாவின் ஆசையான கலெக்டர் கனவை நனவாக்க சென்னைக்கு வரும் கதாநாயகன் சென்னையில் ஒரு நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேறுகிறார். அங்கே உள்ள மோசமான சூழலை பார்த்து அதை மாற்ற முயற்சி செய்ய வில்லன்களால் இடையூறு... இன்னொரு பக்கம் அம்மாவின் கனவான கலெக்டர் பதவி... இதில் எது சரியாக நடந்தது என்பதை புதுசாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா.
மக்களுக்கு நல்லது செய்ய கலெக்டர் ஆனால்தான் முடியுமா? என்ற கேள்விக்கும் புது பதில் இருக்கு.
முதல் பாதி கதையின் வேகம் இரண்டாம் பாதியில் சார்ஜ் இறங்கிப் ...