ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்? – முழு விவரம்!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்? – முழு விவரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்? - முழு விவரம்! ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் பல்வேறு மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து வருகின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது அதற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரச்சோழனாக பிரகாஷ் ராஜ், நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவியாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர...
ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்!

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்! 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார். ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர். மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழக பட்ஜெட் ஆக.13ந்தேதி தாக்கல்!

தமிழக பட்ஜெட் ஆக.13ந்தேதி தாக்கல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக பட்ஜெட் ஆக.13ந்தேதி தாக்கல்! தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பகல் 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2021- 22-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் தொழில் துறை தொடர்பான முக்கிய திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக நிதித்துறை மேற்கொண்டு வருகிறது. இது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் 2021- 22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டதால் அ.தி.மு.க. அரசு இடைக்கால ப...
TN Assembly Centenary Celebration எதிர்க்கட்சியை மதித்து அழைத்தோம்? துரைமுருகன் விளக்கம்

TN Assembly Centenary Celebration எதிர்க்கட்சியை மதித்து அழைத்தோம்? துரைமுருகன் விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
TN Assembly #CentenaryCelebration எதிர்க்கட்சியை மதித்து அழைத்தோம்? #துரைமுருகன் விளக்கம்   https://youtu.be/zd2vI1d9lCI
சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நாளை உத்தரவு

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நாளை உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, நடிகர்கள்
    வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.   நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது.   இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 50 சதவீதம் வரி செலுத்தினால் தனுஷின் காரை பதிவு செய்வதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3.33 லட்சம் வாரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறை...
ராம் இயக்கத்தில் நிவின்பாலி அஞ்சலி நடிக்கும் புதிய படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்!

ராம் இயக்கத்தில் நிவின்பாலி அஞ்சலி நடிக்கும் புதிய படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  *ராம் இயக்கத்தில் நிவின்பாலி அஞ்சலி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு* 'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் 'மாநாடு' என்கிற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். இந்த புதிய படத்தை 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட ஆத்மார்த்தமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்குகிறார். 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட, மலையாள திரையுலகில் இளம் முன்னணி நாயகனாக வலம்வரும் நடிகர் நிவின்பாலி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, சூரி முக்கிய...
3டி-யில் வெளியாகும் அக்‌ஷய் குமார் படம்!

3டி-யில் வெளியாகும் அக்‌ஷய் குமார் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
3டி-யில் வெளியாகும் அக்‌ஷய் குமார் படம்! அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள இந்தி படம் ‘பெல் பாட்டம்’. 1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா முதல் அலையின்போதே லண்டனில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டனர். இதையடுத்து பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான சமயத்தில், கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். பின்னர் சில பிரச்சனைகளால் ஓடிடி முடிவை கைவிட்ட படக்குழு, ஆகஸ்ட் 19-ந் தேதி திரையரங்கில் வெளியிடப்படும் என அறிவித்தனர். கொரோனா 2-வது அலைக்கு பின் வெளியாகும் பிரம்மாண்ட படம் என்பதால், ரசிகர்களை ஈர்க்க ‘பெல் பாட்டம்’ படத்தை ‘3டி’யிலும் வ...
பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சூர்யா!

பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சூர்யா! மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படத்தை ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்து...
நாங்க வேற மாரி – வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நாங்க வேற மாரி – வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நாங்க வேற மாரி - வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு! நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதற்கிடையே, இன்று இரவு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வலிமை படத்தின் முதல் பாடலான,  ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்....
ஆண்கள் ஹாக்கி – இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்!

ஆண்கள் ஹாக்கி – இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஆண்கள் ஹாக்கி - இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்! டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 8வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் கால் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது. இரண்டாவது கால் பாதியில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது. இதனால் 2-2 என சமனிலை வகித்தது. மூன்றாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. நான்காவது கால் பாதியில் பெனால்டி கார்னர் மூலம் பெல்ஜியம் அணி 2 கோல்கள் அடித்தது. இறுதியில், பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது....