ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

Urban local government elections will be held by the end of this year, said Minister K.N. Nehru

Urban local government elections will be held by the end of this year, said Minister K.N. Nehru

HOME SLIDER, NEWS, politics
Urban local government elections will be held by the end of this year, said Urban Development Minister K.N. Nehru . Local elections were announced in October 2016 and were later canceled. It was therefore announced that the local bodies would be managed by separate officers until the election. Their tenure is then extended to once every six months. Currently, the tenure of individual officers has been extended till December 31. Meanwhile, the Supreme Court has ordered that local government elections be held in Villupuram, Kallakurichi, Chengalpattu, Tiruvallur, Vellore, Ranipettai, Tirupattur, Nellai and Tenkasi by September 15. In this context, Urban Development Minister KN Nehru said that the local government elections will be held by the end of this year. ...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது! தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்கிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்கிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 21-ந் தேதி உருவாகிறது. இதனால் கேரளா, கர்நாடகா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ...
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்!

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்!

HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்! நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா முதல் அலை பரவலின்போது ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாகவே கொரோனா பாதிப்பு குறைந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரஷியா நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சில தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கட்டணம் அடிப்படையில் பொதுமக்க...
கொங்குநாடு “கிளரிக்கல் மிஸ்டேக்” அந்தர் பல்டி அடித்த பாஜக

கொங்குநாடு “கிளரிக்கல் மிஸ்டேக்” அந்தர் பல்டி அடித்த பாஜக

HOME SLIDER, kodanki voice, politics, தமிழக அரசியல், வீடியோ
கொங்குநாடு "கிளரிக்கல் மிஸ்டேக்" அந்தர் பல்டி அடித்த பாஜக   https://youtu.be/e0rcWFpfYU8
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு!

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. இந்த அடிப்படையில், மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 22ம் தேதி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள...
’வாழ்’ கோடங்கி திரை விமர்சனம்

’வாழ்’ கோடங்கி திரை விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  ’வாழ்’ திரை விமர்சனம் மனித வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் போராடிக்கொண்டே வாழ்கிறான். அப்படி ஒரு மிஷின் வாழ்க்கையில் வாழும் கதை நாயகன் ப்ரதீப் ஒரு நாள் அவரே எதிர்ப்பார்க்காத ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவர் சந்தித்த மக்கள், இடங்கள், அனுபவங்களே இப்படத்தின் வாழ் பட கதை. அருவி மூலம் இப்படியும்கதை சொல்ல முடியும் என தமிழ் திரையுலகைதிரும்பிப்பார்க்க வைத்த இயக்குனர் அருண் பிரபுவின் அடுத்த படைப்புதான் இந்த வாழ். சிவகார்த்திகேயன் படத்தைதயாரிக்க முன் வந்த போதே ஒரு எதிர் பார்ப்பு இருந்தது. உலக சினிமாக்களில் இது போன்ற ட்ராவல் கதைகள் நிறைய வந்துள்ளது. அதேபோல் ஒரு ட்ராவல் கதை என்றாலும் அதை நம் தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி நமக்கு காட்டிய விதம் நன்று. படத்தின் நாயகன் ப்ரதீப் கண்டிப்பாக வரவேற்க கூடிய டேலண்ட், அவரின் கதாபாத்திரத்தை அருமையாக நட...
ஷங்கர் படத்தில் இணையும் ‘அண்ணாத்த’ பட வில்லன்!

ஷங்கர் படத்தில் இணையும் ‘அண்ணாத்த’ பட வில்லன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் படத்தில் இணையும் ‘அண்ணாத்த’ பட வில்லன்! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ராம்சரணுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘ரங்கஸ்தலம்’ படத்தில் இணைந்து நடித்திருந்த ஜெகபதி பாபுவும், ராம்சரணும், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர். நடிகர் ஜெகபதி பாபு, தற்போது சிவா - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகும் ‘வலிமை’ படக்குழு!

அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகும் ‘வலிமை’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகும் ‘வலிமை’ படக்குழு! நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை கடந்த வாரம் சர்ப்ரைஸாக வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய வலிமை படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறதாம். அதன்படி, வலிமை படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்!

தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்! தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில், நடிகர் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனுஷுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
சோனு சூட் படத்தில் அடிவாங்குவதை நிஜம் என நம்பி டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்!

சோனு சூட் படத்தில் அடிவாங்குவதை நிஜம் என நம்பி டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
சோனு சூட் படத்தில் அடிவாங்குவதை நிஜம் என நம்பி டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்! தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது 7 வயது மகன் விராட், நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகனாம். குருவையா தனது மகனை உறவினர் வீட்டு திருமணத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது மகன் விராட், சோனு சூட் நடித்த ‘துக்குடு’ என்ற தெலுங்கு படத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘துக்குடு’ படத்தில் ஹீரோ மகேஷ் பாபு, வில்லன் சோனு சூட்டை அடித்து துவம்சம் செய்வது போன்று ஒரு சண்டைக் காட்சி இடம்பெற்றிருக்கும். தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அடிவாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத விராட், மகேஷ் பாபு மீதான ஆத்திரத்தில் டி.வி மீது கல்லை எறிந்துள்ளான். டி.வி உடையும் சத்தம் கேட்டதும், உறவினர்கள் அங்கு விரைந்தனர். அதன்பிறகு தான் சிறுவன் விராட், சோனு சூட்டுக்காக டி.வி.யை உடைத்தது தெரியவந்தது. இ...