நாளை நமதே விமர்சனம்
நாளை நமதே விமர்சனம்
வெண்பா கதிரேசன் இயக்கத்தில் வெளியாகி உள்ள நாளை நமதே படத்தின் மைய கருவே பட்டியலின மக்களுக்கு அதிகாரம் மறுக்கப்படுவதும், ஆதீக்க சாதியின் அடக்குமுறைகளும்தான்.
கதைப்படி ஆண்டாண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல்களில் ஒரே சாதியை சேர்ந்தவரே தலைவராக ஏலம் எடுத்து வெற்றி பெற்று வருகிறார்.
இந்த சூழலில் அந்த உள்ளாட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்படுகிறது. இதனால் அங்கே பெரும் மோதல் ஏற்ப்பட்டு பல உயிர்கள் பலியாகிறது.
அதனால் தேர்தல் நடைபெறாமல் மீண்டும் அது பொதுத் தொகுதி ஆகிறது.
பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அது தனித் தொகுதி ஆக அறிவிக்கப்படுகிறது.
இந்த முறையாவது தேர்தல் நடந்ததா? யார் வெற்றி பெற்றார்கள்? என்ன நடந்தது என்பதே நாளை நமதே படத்தின் கதை.
மதுமிதா மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். இன்னும் பல கிராமங்களில் உள்ள தனித் தொகுதிகளின் நிலை இப்படி ...









