ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

அதை யாரும் நம்பாதீங்க… சிபிராஜ் அறிவிப்பு!

அதை யாரும் நம்பாதீங்க… சிபிராஜ் அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அதை யாரும் நம்பாதீங்க... சிபிராஜ் அறிவிப்பு! சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்புடன் பெண்களைக் குறிவைத்துப் பரப்பப்படும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பிரபலமான நடிகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், மர்ம கும்பல் தற்போது நடிகர் சிபிராஜின் பெயரைப் பயன்படுத்தி பெண்களைக் குறிவைத்துள்ளது. சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனக் குறிப்பிட்டுள்ள அந்த கும்பல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப வயது வித்தியாசத்தையும் குறிப்பிட்டுள்ளது. இந்த விளம்பரம் சிபிராஜின் கவனத்திற்கு வர, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது என் கவனத்திற்கு வந்தது. இது...
நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்!

நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்! சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டினார். அந்த ஆசையில் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். அவருக்கு தொலைக்காட்சி தொடர் துணை இ...
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்! ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் ரம்ஜான் பண்டிகை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Man of Fusion என்ற தலைப்பில் பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் இந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்....
4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட டிராகன் விண்கலம்

4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட டிராகன் விண்கலம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காகவும், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காகவும் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள், குறிப்பிட்ட காலம்வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அவ்வகையில், நாசா-ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் டிராகன் விண்கலத்தை நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை அமெரிக்காவின் கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர், ஜப்பான், பிரான்சைச் சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். ராக்கெட்டில் இர...
‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்!

‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்! விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அங்கு முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்ப உள்ளனர். இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பியதும், சில நாட்கள் ஓய்வுக்கு பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளார்களாம். முதலில் சென்னையில் விஜய் - பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப...
உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்!

உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்! பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்திக் அந்தகன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். உடல்நலப் பிரச்சனை காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நலமாகி வந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். ப...
அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு!

அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு! ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்களாம். தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறார்களாம். மேலும், இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தினால் தான் உரிய நேரத்தில் படத்தை முடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளதாம். அதனால் தற்போது தெலங்கானாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியாக...
ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்!

ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்! தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது அவர் கைவசம் `மஹா' என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா அடுத்ததாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ‘105 மினிட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கபட உள்ளதாம். திரில்லர் படமாக உருவாகும் இதை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்தப் படம் படைக்கவுள்ளது. இதேபோல் தமிழில்...
மாநாடு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!

மாநாடு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இந்நிலையில், மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல்...