ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம் ஏன்?
ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம் ஏன்?
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பழங்குனியினருக்கான தொகுதி ஆகும். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஜீவா ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளாராக கு.சின்னதுரை அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஜீவா ஸ்டாலின் ஆதிதிராவிடரா? என்பதில் சர்ச்சை எழுந்தது. ஆத்தூர் அருகே புங்கவாடி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மாரிமுத்து உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் துரையிடம் நேற்று ஒரு புகார் மனுவில் கொடுத்தனர்.
அதில் ஆத்தூர் (தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஜீவா ஸ்டாலினை அக்கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர் இல்லை. இவரது தாத்தா கோபால் (சமையலர்) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுர...









