HOME SLIDER
சர் என எகிறிய வெங்காயம் விலை கிலோ45க்கு விற்க அரசு முடிவு
சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் பெரிய வெங்காயத்தை பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பெரிய வெங்காயம் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம்
சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம்
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்களை கொண்டது. 178 ஆண்டு கால பழமை வாய்ந்த அந்த கனவு கட்டிடம் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கப்போகிறது. அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் சென்னை போலீசின் சிறப்புகளை சொல்லும். சென்னை போலீஸ் என்றாலே அந்த கட்டிடம் தான் நினைவுக்கு வரும்.
அருள், ஷெனாய், செந்தாமரை, ஸ்ரீபால், வால்டர் தேவாரம் போன்ற ஜாம்பவான் போலீஸ் கமிஷனர்கள் பணி புரிந்தது அந்த அலுவலகத்தில் தான். கடைசியாக ஜார்ஜ் கமிஷனராக இருந்தபோது தான், புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரியில் திறக்கப்பட்டது. கடைசியாக அங்கு கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ் தான்.
போலீஸ் கமிஷனர் அலுவலகமாக மாற்றப்படும் முன்பு அந்த பகுதி வயல்வெளி சூழ்ந்த பண்ணை வீடாக இருந்தது. அருணகிரி முதலியார் என்பவர் 1842-ல் அந்த கட்டி...
விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்
விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்
விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட என திமுக எம்.பி., கனிமொழி ட்விட்டரில் கருத்து.
பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் - கனிமொழி.
இந்த குற்றத்தை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி....
முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு
முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு
இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் அவர்களை அவரது இல்லத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தனர் அனைத்து தொழில்நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க இயலவில்லை
அக்டோபர் 28 அன்று சுகாதார குழுவின் கூட்டத்தில் இது சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார் இந்த சந்திப்பின்போது அபிராமி ராமநாதன், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் உரிமையாளர் ஹரி, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் வெங்கடேஷ், வேலூர் சீனிவாசன், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் உரிமையாளர் ரமேஷ், சேலம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்....
Ministers meet TN Guv seeking nod for 7.5% quota bill for medical courses
Ministers meet TN Guv seeking nod for 7.5% quota bill for medical courses
A group of Ministers on Tuesday called on Governor
Banwarilal Purohit today seeking his assent for the Bill providing 7.5 per cent horizontal reservation for government school students in medical seats.
The delegation, comprising Ministers C Ve Shanmugham, D Jayakumar, K P Anbalagan, K A Sengottaiyan and Dr C Vijayabaskar met Mr Purohit at the Raj Bhavan and sought his nod for Bill which was unanimously
passed in the State Assembly on September 15 as the NEET results were announced and the counselling for medical admissions were set to begin.
The state government had on October 16 informed the Madurai Bench of Madras High Court that “until a decision is taken by the Governor on the assent t...
நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை
நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை
அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்!
விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை.
‘காவிரி காப்பாளர்’ பட்டம் மட்டும் போதுமா முதல்வர் பழனிசாமி? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது தெரியாதா?
உடனடி நடவடிக்கை தேவை! - மு.க.ஸ்டாலின்...
எம்பி, எம்.எல்.ஏ.வேட்பாளர் செலவை உயர்த்திய தேர்தல் கமிஷன்!
தமிழகத்தில் வேட்பாளர் செலவை உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதி
தமிழகத்தில் வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாற்றப்பட்ட வேட்பாளர் செலவீன நிர்ணய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் எம்.பி. தேர்தலில் ரூ.77 லட்சம், எம்எல்ஏ தேர்தலில் ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....
ஜெ., வீடு தீபா- தீபக் இருவருக்கும் கோர்ட் நோட்டீஸ்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்துக் கொடுக்கும் விவகாரம் ;* தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ்
வேதா நிலையத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாசிட் செய்திருந்தது
* வருமான வரி பாக்கியை வழங்க கோரி வருமான வரித்துறை மனுத்தாக்கல்
* நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு...
உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை
*சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்... சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு*
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சிறு நீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து, தமது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண் டியனுக்கு, சசிகலா ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷமத்தனமான செய்தி இது என கடிதத் தில் சசிகலா தெரிவித்துள்ளார். திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தம்மை சந்திக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள சசிகலா, இதுபோல உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வதந்தி பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்....

