பாக்யராஜ் உதவியாளர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வரும் ”அந்த 7 நாட்கள்”!
பாக்யராஜ் உதவியாளர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வரும் ”அந்த 7 நாட்கள்”!
தலைப்பை பார்த்த்தும் சமீப காலமாக பழைய சினிமாவை டிஜிட்டல் முறையில் ரீ ரிலீஸ் செய்வது போல பாகராஜின் அந்த 7 நாட்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறதோ என நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.
இது புதுசு… பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ள படம் 'அந்த 7 நாட்கள்'.
இதில் புதுமுகங்கள் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாக்யராஜ் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், மற்றும் பலர் நடித்துள்ளனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார்.
இந...









