சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை மாலை தெரியும்!

 

 

ஊரடங்கு நீடிக்கப்படுமா?
காலையில் பிரதமருடன் வீடியோவில் மீட்டிங்… மாலை அமைச்சர்களுடன் ஆலோசனை… தீயாக வேலை செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களை கடந்த நிலையில், வைரஸ் கிருமி சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பல மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஏற்கனவே ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதே போல ஊரடங்கு உத்தரவு நீடிப்பு தொடர்பாக பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் மாநில முதல்வர்களுடன் இரண்டாவது முறையாக நாளை மீண்டும் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டத்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்து இருக்கிறார்.

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கலாமா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் எப்படி எல்லாம் அமைய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

648 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன