சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி… ஷாக் ஆன ஆசிரியர்

 

கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி… ஷாக் ஆன ஆசிரியர்- இங்கல்ல அமெரிக்காவில்…

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்த ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரானா வைரஸ் பாதித்தது.

இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர்.இந்த நிலையில் குணம் அடைந்து குடியிருப்பு திரும்பிய பின்னர் அவருக்கு அந்த மருத்துவமனை சிகிச்சைக்கான பில்லை அனுப்பியுள்ளனர்

அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். இருக்காதா பின்னே… சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் செலவானதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்தது சேர்க்கப்படவில்லை.

ஆனால் அவரது மனைவியும் கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அதற்கான கட்டணமும் சேர்த்து 1.5 மில்லியன் டாலர்கள் நம்மூர் இந்திய மதிப்பில் ரூ.11.33 கோடியாம்.

நல்ல வேளையாக அவர் மருத்துவ காப்பீடு செய்திருந்தால் கையில் இருந்து பணம் கட்டாமல் தப்பித்து இருக்கிறார்.

இது நடந்தது அமெரிக்காவில் என்றாலும் நம்மூரிலும் இது போல பணம் பிடுங்கும் ஆஸ்பத்திரிகள் பரிசோதனைக்கு இத்தனை ஆயிரம் நாளொன்றுக்கு ரூம் வாடகை இத்தனை லட்சம், கவச உடைக்கு இத்தனை ஆயிரம் அட்வான்ஸ் இத்தனை லட்சம் என தனியார் மருத்துவமனையில் லிஸ்ட் சொன்னது பிரபல டிவியில் ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதனால், சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். தேவை இல்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம். அப்படியே வெளியில் சென்று திரும்பினாலும் கைகள் சுத்தத்தை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

586 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன