கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த புதிய அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், இரு மாநில அரசுகளும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன.
இந்த சூழலில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டது.
அவர்களைத்தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி சென்றார். அவர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக டெல்லி செல்கிறார். அவர், ந...
நாவலரை மறக்காத நல்லவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாவலர் என்று அன்போடு அழைக்கப்படும் இரா.நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 – சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில், 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் என்னும் மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பெயரனும், சொப்னா மதிவாணன் என்னும் பெயர்த்தியும் உள்ளனர்.
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க.அன்பழகன்.
கல...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது
இதையடுத்து நேற்று காலை சென்னை புழல் ஜெயிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.
அவரது தாய் அற்புதம்மாள் வரவேற்றார். முன்னதாக பேரறிவாளனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு தோற்று இல்லை என உறுதி செய்த பின்னரே அவரை அழைத்து வந்தனர்.
ஒரு மாதம் பரோலில் வந்த பேரறிவாளன் கொரோனா தொற்று காரணமாக தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம். வீட்டில் தான் அற்புதம்மாள் உடன் இருப்பதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் டி.எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 6 எஸ்.ஐ.க்கள் என 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரறிவாளன் வீட்டுக்கு சுழற்சி முறையி...
அதிர்ச்சி...வேதனை... ஆ.ராசாவின் மனைவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராராவின் மனைவி பரமேஸ்வரி காலமானார். புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆ.ராசாவின் மனைவி மறைவுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-
தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அவர்களின் வாழ்விணையர் பரமேஸ்வரி அவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசா அ...
அன்பு நண்பர் மு.க. ஸ்டாலின்அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்ய ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் வாழ்த்து!
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெருப்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்கும், நிலையில் முக ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக இருக்கிறார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோயக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமா...
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது - அட்டர்னி ஜெனரல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த 23-ந் தேதி பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பெற்ற ஆட்சியையும் பா.ஜ.க. கவிழ்த்துள்ளது. மத்திய அரசு ஜனநாயக ரீதியில் இயங்கவில்லை. நாடாளுமன்றத்தில் பலம் பொருந்தியதாக பா.ஜ.க உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டையும் கூட மத்திய அரசு பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது’ என குற்றம் சாட்டினார்.
இதில் மக்களை அச்சுறுத்த சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என ஸ்டாலின் தெரிவித்திருப்பது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனவும், அதன் சுதந்திரத்தன்மை அதிகாரத...
கோவையில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மற்றும் நீலகிரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையம், துடியலூரில் பிரசாரம் செய்தார்.
இதற்காக நேற்று இரவே கோவைக்கு வந்த அவர் ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு சென்றார். அங்கு வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் இரவு அவினாசி ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை 7 மணிக்கு மு.க.ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், சிங்காநல்லூர் வேட்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ.வும் வந்தனர்.
அப்போது அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள், இளைஞர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் உதய சூரியன் சின்...