சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: rajini

“இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” ரஜினிகாந்த்தை  கலாய்த்த பிரபல நடிகை!

“இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” ரஜினிகாந்த்தை கலாய்த்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை பிரபல நடிகை கஸ்தூரி கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை!" என பதிவிட்டுள்ளார்   https://twitter.com/KasthuriShankar/status/13438190604971950...
ரஜினியின் முடிவு – ‘மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது’  – திருமாவளவன்

ரஜினியின் முடிவு – ‘மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது’ – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினியின் முடிவு - 'மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது' - திருமாவளவன் நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் நான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்திருக்கும் ரஜினியின் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘அரசியலுக்கு வரவில்லை’ என்பது ரஜினியின் முடிவல்ல. பாபாவின் முடிவு. பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்தஅழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார் என்று தெரிவித்துள்ளவர், மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது என்று தெரிவித்துள்ளார். கொரோனா சந்தேகத்தினால் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால், இது ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன் என்று ரஜினி தெ...
முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி உடனடியாக படப்பிடிப்பில் இருந்து ஓட்டல் திரும்பினார். பின்னர் ரஜினிக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் திடீரென ரத்த அழுத்த பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவருக்கு ரத்த அழுத்தம்...
ஸ்டெர்லைட் போராட்டம்- ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

ஸ்டெர்லைட் போராட்டம்- ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்  விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 23 கட்டங்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், 24வதுகட்ட விசாரணை தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகை முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விசாரணை ஜனவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர்  ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக ரஜினி கூறியிருந்தார். இதுதொடர்பாக அவரிடம் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இதற்கு முன்பு ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது அவர் நேரில் ஆஜராகவில்லை. ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாதது...
வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி!

வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ரஜினி விரைவில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில்  போட்டியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ரஜினியின் அரசியல் திட்டத்தை மாற்றிவிட்டது. ரஜினி தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார். ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கேட்டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டனர். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால், பண்டிகை நாளான இன்று சந்திக்க வந்த ரசிகர்களை ஏமாற்றம...
சினிமாவில் பல ஆண்டுகள் என் குரலாக இருந்தவர் SPB – ரஜினி உருக்கம்

சினிமாவில் பல ஆண்டுகள் என் குரலாக இருந்தவர் SPB – ரஜினி உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:  “என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். நம்முடன் இனி எஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எஸ்.பி.பி. பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். எஸ்.பி.ப...