புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: உக்ரைன்- ரஷ்யா போர் பதற்றம்

உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், உலகம், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்....
அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்....
அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....
உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது. அதேபோன்று உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை கார்கீவ் நகர் மீது நடத்திய நிலையில், தற்போது அந்நகரத்தில் இருந்து தனது துருப்புகளை பின்வாங்குவதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்கீவ்வில் இருந்து பின்வாங்கும் ரஷியா, தனது வணிக பாதைகளை காப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் மீது பல்முனை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது...
கார்கீவ்வில் ரஷிய படைகளை துரத்தியடித்த உக்ரைன் படைகள்!

கார்கீவ்வில் ரஷிய படைகளை துரத்தியடித்த உக்ரைன் படைகள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
ரஷியா- உக்ரைன் போர் கடந்த 77-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியதாக அறிவித்தது. அதன் உருக்கு ஆலையை கைப்பற்றுவதற்கு ரஷியா தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல உக்ரைனின் கார்கிவ் நகரத்தின் பல முக்கிய பகுதிகளை ரஷியா கைப்பற்றி இருந்தது. போரின் தொடக்கத்திலேயே கார்கிவ் ரஷியாவின் பிடியில் சிக்கியது. இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் போரில் உக்ரைன் பல இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி ரஷ்யா ஆக்கிரமித்த கார்கிவ் நகரத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள பல கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டெட்டியானா அபட்செங்கோ த...
உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியது!

உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியது!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
  உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இதற்கிடையே,  கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது. இதனை கவர்னர் மக்சிம் மார்சசென்கோவும் உறுதியளித்தார். ஆனால் ரஷியா இதற்கு மறுப்ப தெரிவித்தது. இந்நிலையில், கருங்கடலில் ரஷியாவின் போர்க்கப்பல் மூழ்கியது என்றும் வெற்றகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், கப்பலில் வெடிமருந்து வெடித்ததால்தான் தீப்பிடித்தது என்றும், அதன் ...
வீழ்ச்சி அடையும் உள்நாட்டு உற்பத்தி – உக்ரைன் ரஷிய போர்!

வீழ்ச்சி அடையும் உள்நாட்டு உற்பத்தி – உக்ரைன் ரஷிய போர்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோ உறுப்பினராக இல்லாத ஆஸ்திரியா நாட்டின் அதிபர் கார்ல் நெஹமர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்தார். அப்போது, உக்ரைனுடனான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லையெனில் இரு பக்கமும் சேதங்கள் ஏற்படும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.  உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும். சாலைகளில் ஆங்காங்கே உடல்கள் கிடத்தப்பட்டுள்ளன என அந்த நகர மேயர் பாய்சென்கோ தெரிவித்துள்ளார். மொபைல் டிரக்குகள் மூலம் தகனங்கள் செய்யப்படுகின்றன. டிரக்குகளில் உள்ளே உள்ள குழாய் மூலம் இந்த உடல்கள் எரிக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.  ரஷியா உடனான போர் உக்ரைனின் பொருளாதார உற்பத்தியை இந்த ஆண்டு 45 சதவீதம் வீழ்ச்சி அடையச் செய்யும் என உலக வங்கி கணித்துள்ளது....
ரஷிய ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு!

ரஷிய ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் ராணுவமும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் எண்ணெய் கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்தது என உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.. மேலும், உக்ரைனுக்குள் நுழையும் ஊடுருவல்காரர்கள் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டு மக்கள் பாட்டில் குண்டுகளை தயாராக வைத்துள்ளனர்....
வாட்ஸ் அப் காலில் உக்ரைன் தமிழக மாணவர்களிடம்  முதலமைச்சர் பேச்சு!

வாட்ஸ் அப் காலில் உக்ரைன் தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. உக்ரைனில் ரஷிய படைகள் 3-வது நாளாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் உக்ரைனில் உள்ள பல இந்திய மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் ஊர்திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து  வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் உரையாடிய மு.க.ஸ்டாலின், அங்குள்ள சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களை தைரியமாக இருக்கும்படி கூறிய முதல்வர்  , அவர்கள் அன...
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பின்றி எல்லைகளுக்குச் செல்லவேண்டாம் – மத்திய அரசு!

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பின்றி எல்லைகளுக்குச் செல்லவேண்டாம் – மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,  உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எவ்வித முன் அறிவிப்பின்றி பிற நாட்டு எல்லைகளுக்குச் செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதால் தங்குவதற்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. தேவையற்ற நடமாட்டத்தை தவிர்த்து வீடுகளுக்கு உள்ளேயே பத்திரமாக இருக்க வேண்டும். எல்லை சோதனை சாவடிகளைப் பற்றி தெரியாமல் வெளியேற வேண்டாம். எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் இந்திய தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது....