சர்ச்சைக்கு பதிலளித்த மாதவன்!
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அதில் மாதவான் பேசியதாவது, "ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது.
நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்ச...









