தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி – பிறந்த நாளில் ஸ்டாலின் புகழாரம்
கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் வந்த முதல் பிறந்த நாள் என்பதால் தொண்டர்கள் பல இடங்களிலும் வழக்கத்தை விட உற்சாகமாக கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி;
இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி!
தலைவரே!
உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள்.
நீங்கள் இருந்து சாதி...









