புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

Tag: RAJINIKANTH

அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு!

அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு! ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்களாம். தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறார்களாம். மேலும், இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தினால் தான் உரிய நேரத்தில் படத்தை முடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளதாம். அதனால் தற்போது தெலங்கானாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியாக...
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், ‘99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதர...
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது! இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் “தாதா சாகேப் பால்கே” விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969-ம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பல்வேறு திரை பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட டைரக்டர் பாலச்சந...
“இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” ரஜினிகாந்த்தை  கலாய்த்த பிரபல நடிகை!

“இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” ரஜினிகாந்த்தை கலாய்த்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை பிரபல நடிகை கஸ்தூரி கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை!" என பதிவிட்டுள்ளார்   https://twitter.com/KasthuriShankar/status/13438190604971950...
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும்; அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்....
முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி உடனடியாக படப்பிடிப்பில் இருந்து ஓட்டல் திரும்பினார். பின்னர் ரஜினிக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் திடீரென ரத்த அழுத்த பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவருக்கு ரத்த அழுத்தம்...
ஸ்டெர்லைட் போராட்டம்- ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

ஸ்டெர்லைட் போராட்டம்- ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்  விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 23 கட்டங்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், 24வதுகட்ட விசாரணை தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகை முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விசாரணை ஜனவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர்  ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக ரஜினி கூறியிருந்தார். இதுதொடர்பாக அவரிடம் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இதற்கு முன்பு ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது அவர் நேரில் ஆஜராகவில்லை. ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாதது...
வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி!

வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ரஜினி விரைவில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில்  போட்டியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ரஜினியின் அரசியல் திட்டத்தை மாற்றிவிட்டது. ரஜினி தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார். ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கேட்டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டனர். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால், பண்டிகை நாளான இன்று சந்திக்க வந்த ரசிகர்களை ஏமாற்றம...
கொரானா பிசாசுத்தனமான அசுர அடி ரஜினிகாந்த் எச்சரிக்கை அறிக்கை!

கொரானா பிசாசுத்தனமான அசுர அடி ரஜினிகாந்த் எச்சரிக்கை அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா கொடுத்தது பிசாசுத்தனமான அசுர அடி கவனமாக இருக்கவும் ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கை போச்சு ரஜினிகாந்த் எச்சரிக்கை! கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றி. அடிபட்ட உடனே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரானா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும். உங்கள் குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பாக வைப்பது உங்கள் அடிப்படை கடமை. எந்த சூழ் நிலையிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கை போச்சு. இவ்...