வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

Tag: simbu

‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’! விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன. நடிகர் ஜெய் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவ சிவா படத்திற்கு ஜெய் தான் இசையமைத்துள்ளார். நடிகர் ஜெய் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்பு திடீரென கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்ததாக, நடிகர் ஜெய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிம்பு...
மண் தரையில் தூங்கிய சிம்பு!

மண் தரையில் தூங்கிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மண் தரையில் தூங்கிய சிம்பு! நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்...
பிறந்தநாளில் தொண்டு நிறுவனம் தொடங்கும் சிம்பு!

பிறந்தநாளில் தொண்டு நிறுவனம் தொடங்கும் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சிலம்பரசன் விரைவில் தொண்டு நிறுவனம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது ரசிகர்கள் போற்றும் மாஸ் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். ஓரிரு படங்கள் மட்டுமே நடித்து வந்த சிம்பு தற்போது 4க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதே போன்று ஹன்சிகா உடன் இணைந்து நடித்த சிம்புவின் மஹா படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்தப் படத்தைத் தொடர்ந்து பத்து தல, மாநாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மக்களின் நலனுக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கவுள்ளார். விரைவில், தொண்டு நிறுவனம் தொடங்க இருக்கிறார். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு...
ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்

ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்* சுரேஷ் காமாட்சியின் ‘வி’ ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு காட்சிகளை படமாகும் வேகமும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுக்கும் சிலம்பரசனின் ஒத்துழைப்பும் படக்குழுவினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. குறிப்பாக புதிய சிலம்பரசனை இந்தப்படப்பிடிப்பில் பார்க்க முடிவதாக படக்குழுவினர் சிலாகிக்கின்றனர். இதேவேகத்தில் சென்றால், ஏற்கனவே திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிவடைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது, இந்தநிலையில், தற்போது ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்துல் காலிக் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞன் கதாபாத்தி...
சிலம்பரசன் தலையில் ரத்த காயங்களுடன் ‘மாநாடு’ பர்ஸ்ட் லுக்

சிலம்பரசன் தலையில் ரத்த காயங்களுடன் ‘மாநாடு’ பர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 40 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.   ‘ஈஸ்வரன்’ படத்தை முடித்த கையோடு நவம்பர் 9-ம் தேதியிலிருந்து பாண்டிச்சேரியில் தொடங்கிய ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. சிலம்பரசன் முதல்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு தலையின் ஒரு பக்கத்திலிருந்து ரத்தம் வழிய, அவர் கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையில் புல்லட் பாய்ந்து ரத...
“ஈஸ்வரன்” சிம்புவுக்கு இரண்டாவது முறையாக வனத்துறை நோட்டீஸ்

“ஈஸ்வரன்” சிம்புவுக்கு இரண்டாவது முறையாக வனத்துறை நோட்டீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்புவின் 46-வது திரைப்படமாக ஈஸ்வரன் உருவாகி வருகிறது; திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜயதசமி அன்று, வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிம்பு தனது தோளில் பாம்புடன் இருப்பதுபோல் காட்சிகள் உள்ளன. முதலில் அதைப் பார்த்த பலரும் அது கிராபிக்ஸாக இருக்கலாம் என நினைத்தனர். இந்த நிலையில், வனப்பகுதி ஒன்றில், மரத்தின் மீதுள்ள பாம்பு ஒன்றை நடிகர் சிம்பு லாவகமாகப் பிடித்து சாக்குப் பைக்குள் போடுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் பாம்புகள் அனைத்தும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக உள்ள நிலையில் அவற்றை பிடிப்பது, தனி நபர்கள் வைத்திருப்பது வனத்துறை சட்டப்படி குற்றச் செயலாகும். அதனால், சிம்பு மீது, வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை ...
பயம் வேண்டாம் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம் நிச்சயம் கொரானாவை வெல்வோம் – சிம்பு திடீர் அறிக்கை

பயம் வேண்டாம் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம் நிச்சயம் கொரானாவை வெல்வோம் – சிம்பு திடீர் அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன் TR -இன் வணக்கங்கள். மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன... டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன். இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும். இதேபோல் கொரானா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல். கொரானாவின் பாதிப்பில...
விமானத்தில் டேக் ஆப் ஆன சிம்புவின் மாநாடு..!

விமானத்தில் டேக் ஆப் ஆன சிம்புவின் மாநாடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாநாடு தொடங்க ரெடியாகிட்டேன்... வீடியோ வெளியிட்ட சிம்பு..! நடிகர் சிம்பு "மஹா" படத்தில் நடித்து முடித்ததும் கவுதம் கார்த்தியுடன் இணைந்து ஞானவேல்ராஜா தயாரிக்கும் படப்பிடிப்பில் பிசியாக நடித்தார். இந்த படங்களில் நடிப்பதற்கு முன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க அறிவிப்பு வெளியிட்டிருந்தார் சிம்பு. ஆனால் வெளிநாட்டு படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அனுமதி பெற வேண்டிய சூழல் இருந்ததால் பக்காவாக எல்லாவற்றையும் முடித்து இப்போது ஷூட்டிங் தொடங்க தயாராகியிருக்கிறார்கள். https://twitter.com/onlykodanki/status/1145679156249632769?s=19 ஷூட்டிங் தொடங்கப் போவதை சிம்பு தன் பாணியில் சின்னதாக வீடியோ வெளியிட்டு மாநாடு டேக் ஆப் ஆனதை சொல்லி இருக்கிறார். மலேசியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்திய பின் அடுத்த கட்ட படப்பிடிப்பை கோவையில் நடத...
சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..!

சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..! கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ்குமாரின் 'முஃப்தி' என்ற அதிரடி ஆக்சன் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சிம்பு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர். சிம்பு ஏற்கனவே 'செக்க சிவந்த வானம்' படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். முஃப்தி' படத்தை கன்னடத்தில் இயக்கிய அதே இயக்குனர் நார்தன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை மதன் கார்க்கி எழுதவுள்ளார். இந்த படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அதோடு சேர்த்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படம் என சிம்பு அடுத்தடுத்து பிசியாக உள்ளார்....
மாஜி காதலியோடு படகில் போன  சிம்பு மஹா ஷூட்டிங் சுவாரஸ்யம்..!

மாஜி காதலியோடு படகில் போன சிம்பு மஹா ஷூட்டிங் சுவாரஸ்யம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வைரலாகி வருகிறது. சிம்பு - ஹன்சிகா இந்த படத்தில் கணவன் - மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே படங்களில் கவனம் செலுத்தினாலும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மஹா படத்தில் ஹன்சிகா மிக ...