சனிக்கிழமை, செப்டம்பர் 12
Shadow

Tag: dmk

திமுக எம்.பி.க்கள் தமிழ் வாழ்க கோஷம் … வந்தே மாதரம் கோஷம் போட்ட அதிமுக எம்.பி… பதவி ஏற்றதும் பரபரப்பு…!

திமுக எம்.பி.க்கள் தமிழ் வாழ்க கோஷம் … வந்தே மாதரம் கோஷம் போட்ட அதிமுக எம்.பி… பதவி ஏற்றதும் பரபரப்பு…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழ் வாழ்க’ என்று கூறி பதவியேற்ற திமுக எம்.பி.க்களுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் கோஷம்..! சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் நேற்று பதவி ஏற்றனர். 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக இன்று பதவி ஏற்றனர். புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து சில மாநில எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அதன்பிறகு தமிழக எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். வழக்கமாக எம்.பி.க்கள் பதவி ஏற்கும்போது, ‘உளமாற உறுதி கூறுகிறேன்...’ என்று கூறி முடிப்பார்கள். அதன்பிறகு பாராளுமன்ற பதிவேட்டில் கையெழுத்திட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுவார்கள். ஆனால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் இன்று பாராளுமன்றத்தில் பதவி ஏற்று முடித்ததும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர். ...
திமுக தோல்விக்கான காரணத்தை ஆராய கமிட்டி அமைத்த ஸ்டாலின்..!

திமுக தோல்விக்கான காரணத்தை ஆராய கமிட்டி அமைத்த ஸ்டாலின்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக தோல்விக்கான காரணத்தை ஆராய கமிட்டி அமைத்த ஸ்டாலின்..! சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் அடைந்த தோல்வி குறித்து ஆய்வு செய்ய திமுக குழு ஒன்றை அமைத்துள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அபாரமாக வெற்றி பெற்றாலும் 22 தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 9 தொகுதிகளை இழந்ததால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனது. இதனால் திமுக ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. திமுக வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 9 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய திமுக தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவுக்கு தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையின் கீழ் மொத்தம்...
ஆந்திரா முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்

ஆந்திரா முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திரா முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவ்ர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்...
மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..!

மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..! சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்டாலின் கட்சித்தலைவர் ஆன பின் நடந்த தேர்தலில் இந்த இமாலய வெற்றி குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.     கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்...
கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் அதிகம் கவனம் பெற்றது. திமுக ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணியையும், அதிமுக பாஜகவுடன் ஒரு கூட்டணியும், தினகரனின் அமமுக தனியாகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் தனியாகவும், நாம் தமிழர் சீமான் தனியாகவும் களத்தில் நின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடை பெற உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை நிலவுவதால் மாநில கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதோடு மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக மத்தியில் இருந்த மோடி அரசுக்கு இணக்கமாக செயல்பட்டதோடு, மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்...
மோடிக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய சோனியா காந்தி..!

மோடிக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய சோனியா காந்தி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் அனுப்பி வைத்தார் வரும் 23ஆம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.. காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கும் 23ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாஜ அரசின் மீது நாடுமுழுக்க கடும் அதிருப்தி நிலவி வந்தது. இந்த தேர்தலிலும் மோடி அரசு படு தோல்வி அடையும் என கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது....
மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்

மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக தமிழிசை சவுந்தரராஜன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்....
உதவி கேட்ட துரைமுருகன்… நோ சொன்ன ஸ்டாலின்… பதட்டத்தில் உடன்பிறப்புகள்..!

உதவி கேட்ட துரைமுருகன்… நோ சொன்ன ஸ்டாலின்… பதட்டத்தில் உடன்பிறப்புகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியின் தலைமையின் கீழ் மற்ற கட்சிகள் களம் காணவுள்ளன. இந்நிலையில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் ஏ.சி. சண்முகம் பணத்தை வாரி செலவு செய்து செய்துள்ளார். இந்த முறையும் அதிகமாகச் செலவழிக்க இருப்பதாகவும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது இந்நிலையில் இது குறித்து ஸ்டாலினிடம் பேசிய துரைமுருகன், வேலூர் தொகுதியில் நெருக்கடி அதிகம் ...
MP தேர்தல் – கூட்டணி உடன்பாடு பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் குழுக்கள் அமைப்பு..!

MP தேர்தல் – கூட்டணி உடன்பாடு பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் குழுக்கள் அமைப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகின்றன. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்து திமுக பொது செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். https://twitter.com/arivalayam/status/1086990534718058496 திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 8 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ராமசாமி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்...
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்த சோனியா காந்தி

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்த சோனியா காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்ததையடுத்து,  அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைக்க  முடிவு செய்யப்பட்டது. கலைஞர் முழு உருவசிலை  அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதியின் சிலை வடிவமைக்கப்பட்டு, அண்ணா அறிவாலயத்தில் அந்த சிலை நிறுவப்பட்டிருக்கிறது. அந்த சிலையை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உடனிருந்தனர். சோனியா காந்தி திறந்த கலைஞர் சிலை அந்த விழாவை முடித்துக் கொண்டு நேரடியாக மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற சோனியா காந்தி, அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ...